திசைமாறும் ராகுவின் உக்கிரம்... உலகத்தையே ஏழையாக்கிய கொரோனா! எப்போது முடிவுக்கு வரும்?

மிதுனம் ராசியில் திருவாதிரை நட்சத்தில் இப்போது ராகுவின் சஞ்சாரம் உள்ளது. திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ராகுவின் நட்சத்திரங்கள். இப்போது தனது நட்சத்திர சாரத்தில் ராகு சஞ்சரிக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் சூரியன், சந்திரன், புதன், குரு, கேது, சனி ஆகிய ஆறு கிரகங்கள் சேர்ந்து இருந்த போது எதிரே இருந்த ராகுவின் பார்வை இந்த ஆறு கிரகங்களின் மீது விழுந்தது.டிசம்பர் 26ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணமும் புதுவித வைரஸ் நோயை உலகத்திற்கு கொண்டு வந்து விட்டது. சீனாவில் உருவான இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி கொள்ளை நோயாக உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்துள்ளது. இந்த நோய் பலருக்கும் வேலையிழப்பையும் பொருளாதார மந்தநிலையையும் ஏற்படுத்தி உள்ளது.

எப்போது முடிவுக்கு வரும்
கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக ஊராடங்கு அமலில் இருந்தாலும் இந்தியாவில் பல பகுதிகளிலும் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த ஊராடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதே இப்போது கேள்வியாக உள்ளது. தற்போது மகரம் ராசியில் கிரகங்கள் கூடியுள்ளன. குரு, சனி, செவ்வாய் சேர்க்கை இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகரித்துள்ளது.பாதிப்பு குறைவது எப்போது
மே மாதம் 3ஆம் தேதி முதல் மகரம் ராசியில் இருந்த கிரகங்களின் கூட்டணி பிரிகின்றன. செவ்வாய் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். அதே போல ராகுவும் தனது நட்சத்திரமான திருவாதிரையில் இருந்து மே இறுதிக்குள் மிருகஷீரிடம் நட்சத்திற்குள் நுழைகிறார். பின்னோக்கி நகரும் ராகு செப்டம்பர் மாதம் பெயர்ச்சியாகி ரிஷபம் ராசிக்குள் வருகிறார்.

கொரோனா பாதிப்பு குறையும்
தற்போது அதிசாரமாக மகரம் ராசிக்கு வந்துள்ள குரு வக்ரநிலையில் தனுசு ராசிக்கு செல்கிறார். ஆண்டு இறுதியில் மீண்டும் நேர் கதியில் மகரம் ராசிக்கு நுழைகிறார். இந்த கிரகங்களின் நகர்வினால் இப்போது உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து செப்டம்பருக்குள் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இந்த நோயின் தாக்கம் வரும் 2021 வரை நீடிக்கும் என்பது ஜோதிட கணிப்பாகும்.

பொருளாதார வல்லரவு
கொரோனா வைரஸ் பலரது வேலையை பறித்துள்ளது. பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் ஏன் உலகம் முழுவதுமே கொரோனா பிணி பலரை ஏழைகளாக்கியுள்ளது. பரம ஏழைகளை பசியால் வாட்டி வருகிறது. இதற்குக்காரணம் சனியின் தாக்கம்தான். சனிபகவான் மே மாத மத்தியில் இருந்து வக்ர நிலைக்கு செல்கிறார். இதனாலும் பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமை விரைவில் மாறும் 2021 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திற்குள் இந்தியாவின் பொருளாதார நிலை உயர வாய்ப்புள்ளது என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இறை நம்பிக்கையும், சாத்வீக உணவு முறையும் நோய் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்கின்றனர் பிரபல ஜோதிடர்கள்.

கண்டச்சனி காலம்
இந்தியாவின் ராசி கடக ராசி ரிஷப லக்னம். லக்னத்தில் ராகு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், கடகத்திர் சூரியன், சனி, புதன், சந்திரன் சுக்கிரன் துலாமில் குரு, விருச்சிகத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கோச்சார ரீதியாக இப்போது கண்டச்சனி காலம். வக்ரமடையும் போது சில பாதிப்புகள் குறையும். நாட்டின் ஜாதகப்படி அஷ்டமாதிபதி குரு ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். கோச்சார ரீதியாக குரு அதிசாரமாக இப்போது சனியோடு சேர்ந்து ஏழாம் வட்டில் இருக்கிறார். மே மாத இறுதி வரைக்கும் அரசு சொல்லும் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் மட்டுமே நோயினால் அதிக அளவில் உயிர்பலி ஏற்படாமல் தப்பிக்க முடியும்.
Previous Post Next Post