இலங்கையில் இருக்கும் பிரித்தானியார்களுக்கு முக்கிய அறிவிப்பு! அதன் பின் உத்தரவாதம் அளிக்க முடியாது

இலங்கையில் இருக்கும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் விமானங்கள் கிடைக்கும் போது உடனடியாக நாட்டிற்கு திரும்பும் படி இலங்கைக்கான பிரித்தானிய தூதர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா அரசு வெளிநாடுகளில் எல்லைகள் திறந்திருக்கும் போதும், விமானங்கள் கிடைக்கும் போது, உடனடியாக அதை பயன்படுத்தி நாடு திரும்பும்மாறு அறிவுறுத்துகிறது.

அதன் படி ஏப்ரல் 11-ஆம் திகதி கொழும்புவில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானத்தை இயக்க உத்தேசித்துள்ளதாக இலங்கை ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளதால், 1979 என்ற எண்ணை அழைக்கும் படியும், இலங்கையில் இருக்கும் பிரித்தானியார்கள் உடனடியாக திரும்பும்படி அறிவுறுத்துவதாகவும் UK in Sri Lanka தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, இலங்கையில் இருந்து பயணிகள் விமானங்கள் கிடைக்கும் போதும், விமானநிலையங்கள் திறந்திருக்கும் போது, அதை பயன்படுத்தி கொண்டு வெளியேறுமாறு அறிவுறுத்துகிறோம்.

உலகளாவிய தொற்று நோய்களின் போது, தொடர்ந்து நாட்டில் தங்குவது ஆபத்தானது என்று இலங்கைக்கான தூதர் Sarah Hulton கூறியுள்ளார்.

பொதுவாக பிரித்தானிய அரசாங்கம் வெளிநாடுகளில் இருக்கும் பிரித்தானியார்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியதை வலியுறுத்திய அவர், இலங்கையில் பாதிப்பு திடீரென்று தீவிரமானால், தூதரக சேவைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்படலாம்.

பிற திகதிகளில் மக்கள் வெளியேற விரும்பினால் என்ன விமான சேவைகள் கிடைக்கக்கூடும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண ஆலோசனைகளுக்கும், புதுப்பித்த விமான தகவல்களுக்கும் www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/coronavirus மற்றும் @UKinSriLanka-ஐ பின்பற்றும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.
Previous Post Next Post