வடகொரிய அரசதலைவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்த முக்கிய இரண்டு நாடுகள்

மர்மதேசம் என அழைக்கப்படும் வடகொரியாவில் அதன் அரச தலைவரின் உடல்நிலை தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைச்சிகிச்சையால் அவர் உயிரிழந்து விட்டார் என ஒரு தகவலும் இல்லை அவர் மரணத் தறுவாயில் உள்ளார் என மற்றொரு தகவலும் வெளியாகி தற்போதைய கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சர்வதேசத்தில் பேசுபொருளான விடயமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் தென்கொரிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அந்நாட்டு அமைச்சர் கிம் யியான் சுல், கிம் ஜாங் உன்னின் இருப்பிடம் குறித்து தென்கொரிய அரசு அறிந்துவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.இதேவேளை அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து தனக்கும் தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில், கிம் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், கிம் நலமுடன் இருப்பதாகவும் இதுகுறித்து விரைவில் உலகிற்குத் தெரியவரும் என்றும் கூறினார். மேலும், இதுபற்றி பேச முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

. கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என தகவல்கள் உலா வந்த நிலையில், அவர் இருக்கும் இடம் தெரியும் என அமெரிக்காவும், தென்கொரியாவும் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post Next Post