பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் எழுதிய மருத்துவர் கொரோனாவால் பலி! மகனின் உணர்ச்சி மிகு பதிவு

மருத்துவர் ஊழியர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தேவை என்று பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கடிதம் எழுதிய மருத்துவர் கொரோனா வைரஸ் நோயால் பரிதமாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளை கையாண்டு வரும் மருத்துவ ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், Abdul Mabud Chowdhury என்ற 53 வயது NHS ஊழியருமான இவர். லண்டனின் Romford-ல் இருக்கும் Queens மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காரணமாக 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த புதன் கிழமை உயிரிழந்தார்.

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், எங்களையும் எங்கள் குடும்பங்களையும் பாதுகாக்க, போதுமான பாதுகாப்பு உபகரணங்களை கோரியிருந்தார். இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு NHS ஊழியர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸ் நோயாளிகளிடம் இருண்டுஹ் ஊழியர்கள் நேரடித் தொடர்பு கொண்டுள்ளதால், எங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்வதற்காகவும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அவர் உயிரிழந்துள்ளதால், இஸ்லாமிய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

மேலும், அதில், அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுச் செல்கிறார். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களிடம் உள்ளன. மருத்துவமனையில் சேருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் பிரதமருக்கு ஒரு செய்தியை எழுதினார். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என்று குறிப்பிட்டிருந்தது.அப்பாவை இழந்த வேதனையிலும், Abdul Mabud Chowdhury மகன் சமூகவலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில், என் அப்பா இரக்கமுள்ள ஒரு ஹீரோ, அவர் அந்த நிலையில் இருந்தபோது அந்த கடிதத்தை எழுதினார், அவர் தனது சக ஊழியர்களைப் பற்றி எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

அரசாங்கம் செய்துகொண்டிருக்கும் ஒரு தவறை சுட்டிக்காட்ட என் அப்பாவிற்கு தைரியம் இருந்தது. NHS ஊழியர்கள் இப்போது முன் வரிசையில் நின்று பாதுகாப்பதற்கு, இது ஒரு கவனத்தை ஈர்த்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Abdul Mabud Chowdhury கிழக்கு லண்டனில் இருக்கும் Homerton University மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த 23-ஆம் திகதி உடல்நிலை சரியில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த புதன் கிழமை உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உயிரை இழந்த 17 NHS மருத்துவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post