இந்த சார்வரி தமிழ் புத்தாண்டின் முதல் கடக ராசியினருக்கு கிடைக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா?

கடக ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு முன்னேற்றத்தைத் தரக்கூடிய வருடமாக தான் பிறக்கப் போகின்றது.

உங்கள் முயற்சிகள் அனைத்தும் இந்த வருடம் நிறைவேறி, வெற்றிப் பாதையில் செல்லும். வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். பணவரவு சீராக இருக்கும்.

உங்களது பொருட்களை மட்டும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்களது அலுவலகப் பணியில் கவனமாக இருக்க வேண்டும்.

அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு ரகசிய விஷயங்களையும், உங்களுடன் பணிபுரிபவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது.

அனாவசியமாக ரகசியங்களை வெளியில் கூறுவதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

சொந்தத் தொழிலை விரிவுபடுத்த, புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கடக ராசிகாரர்கள் அரசாங்க வேலைக்காக வைக்கப்படும் தேர்வுகளை தைரியமாக எழுதலாம். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு நிறைய சம்பளத்துடன் புரமோசன் கிடைக்கும்.

காரணம் உங்க ராசிக்கு உத்யோக ஸ்தானதிபதியான செவ்வாய் உச்சம் பெற்று உங்க ராசியை பார்க்கிறார். அதிகார பதவிகள் தேடி வரும். உங்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை தேடி வரும். அரசு அதிகாரிகளுக்கு மதிப்பு மரியாதை கூடும்.

பெண்களுக்கு இந்த வருடம் அமோகமான வருடமாக தான் அமையப் போகின்றது. தங்களது சேமிப்பின் மூலம் பல வகையான, விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்புகள் கூடி வரும்.

வேலைகளில் இருக்கும் பிரச்சினைகளில் இருந்து பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். தங்கம் வாங்கும் யோகம் வருகிறது. பெண்கள் நகைகளை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றிகள் தேடி வரும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு யோகமான ஆண்டு. நன்றாக படிப்பீர்கள்.

பரிகாரம்:
செவ்வாய்கிழமையில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வணங்குங்கள். பன்னீர் அபிஷேகம் பண்ணுங்க. வாழை மரத்திற்கு தண்ணீர் ஊற்றுங்கள். தோஷங்கள் நீங்கும் திருமணம் நடைபெறும். தினம் தோறும் முருகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.
Previous Post Next Post