நாளை முதல் புதிய நடைமுறை! பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு

அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறைகளின் ஊழியர்களுக்கு அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் மேலதிகமாக பணியிடத் தலைவரின் கடிதமும் வைத்திருக்க வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த புதிய நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வரும். இது மருத்துவர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்கு பொருந்தாது என்று தெரிவித்தார்.

அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பொது மற்றும் தனியார் துறையின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் தேசிய அடையாள அட்டையுடன் இந்த சேவை கடிதம் கட்டாயமானது என்று தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளுக்கான அனுமதி இந்த மாதம் 30 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்றும் அவற்றை உடனடியாக புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அஜித் ரோஹன தெரிவித்தார்.
Previous Post Next Post