பகலில் டாக்டர்.. இரவில் சாலையோர உறக்கம்.. பலரையும் வியக்கவைத்த மருத்துவரின் நெகிழ்ச்சி செயல்..!

கொரோனா வைரஸ் ஆனது அனைத்து நாடுகளிலும், வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலரும் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த, அரசு மருத்துவர் சச்சின் நாயக் அவரை தனிமைபடுத்திக்கொண்டு, காலையில் மருத்துவ வேலையையும் கவனித்து வருகிறார்.

காலையில் மருத்துவ பணியை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பாமல், காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கேயே உறங்கி விடுகிறார் டாக்டர் சச்சின் நாயக்.

மேலும், அதற்காக காரில் தண்ணீர், சோப்பு, பேஸ்ட், பிரஷ் மற்றும் லேப்டாப் போன்றவை வைத்துக் கொள்வார். நேரம் கிடைக்கும் போது சாலை ஓரத்தில் சிறிது நேரம் நடந்து கொள்வார். மனைவி, மகளிடம் செல்போனில் பேசிக்கொள்வார்.

இவ்வாறாக அவர் ஒருவார இரவுகளை சாலை ஓரத்தில் காரிலே கழித்தார். தன்மூலம் கொரோனா தொற்று மனைவிக்கோ, மகளுக்கோ வேறு யாருக்கோ பரவி விடக்கூடாது என்பதோடு தனது மருத்துவ பணிக்கும் பாதகம் வந்துவிடக்கூடாது என்பதில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, எச்சரிக்கை இருந்தார்.

இதனால், தற்போது மருத்துவமனை சார்பில் டாக்டர்கள், ஓட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.அதில் டாக்டர் சச்சின் நாயக்கும் தங்க இருக்கிறார்.

இதையடுத்து, இவர் காரில் தங்கி இரவைக் கழித்த தகவல், முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு தெரியவந்ததையடுத்து, டாக்டரை பாராட்டி இருக்கிறார்.

அந்த பாராட்டில், “கொரோனாவுக்கு எதிராக போரிடும் உங்களை போன்றவரை இந்த மாநிலமும் நானும் பாராட்டுகிறோம். சச்சின் உங்கள் உணர்வுக்கு ஒரு சல்யூட்” என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Previous Post Next Post