வடகொரிய அதிபர் கிம் ஜாங் தற்போது அனுப்பியுள்ள முக்கிய கடிதம்! அதில் என்ன எழுதப்பட்டுள்ளது தெரியுமா?வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சுற்றுலா திட்டத்தில் பணிபுரியும் கட்டிடப் பணி செய்வோருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான செய்தியை வடகொரிய பத்திரிக்கையான Rodong Sinmun வெளியிட்டுள்ளது.

கிம் ஜாங் இறந்து விட்டார் மற்றும் மரண படுக்கையில் உயிருக்கு போராடுகிறார் என்றெல்லாம் செய்திகள் வரும் நிலையில் அதை பொய் என நிரூபிக்கவே Rodong Sinmun பத்திரிக்கை இந்த செய்தியை வெளியிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.அதன்படி கிம் ஜாங் தனிப்பட்ட முறையில் Wonsan நகரில் கடலோர ரிசார்ட்டில் சுற்றுலா திட்டத்தில் பணிபுரியும் கட்டிடப் பணி செய்வோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த கடிதத்தை கிம் அனுப்பினாரா அல்லது அவர் சார்பில் அனுப்பப்பட்டதா என்ற விபரம் சரியாக தெரியவில்லை.

கிம் ஜாங் இறந்துவிட்டார் என ஹாங் காங் தொலைக்காட்சி இயக்குனர் Shijian Xingzou சில தினங்களுக்கு கூறியிருந்தார்.

அதே சமயம் வடகொரிய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் Chung-in Moon கூறுகையில், கிம் நலமாகவும், உயிருடனும் உள்ளார்.

அவர் Wonsan நகரில் நகரில் கடந்த 13ஆம் திகதியில் இருந்து தங்கியுள்ளார் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post