சார்வரி தமிழ் புத்தாண்டு மலரவுள்ள நேரம்! ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார்

சார்வரி தமிழ் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்க படி இரவு ஏழு மணி 26 நிமிடத்திலேயும், திருகணித பஞ்சாங்க படி எட்டு மணி 23 நிமிடத்திலேயும் மலரவுள்ளது.

இந்த விடயத்தை சர்வதேச இந்து மதகுருபீடாதிபதி, அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்தா பீடாதிபதி சபரிமலை குரு முதல்வர் மஹாராஜ ராஜகுரு ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

புத்தாண்டு மலரும் நேரங்களிலோ அல்லது விடியற்காலையிலோ மருத்து நீரை தெளித்து ஸ்நானம் செய்து கொள்ளலாம்.

இன்றைய சூழலில் மருத்து நீர் கிடைப்பது கடினமான நிலையில் வீட்டிலேயே மருத்துநீரை தயாரித்து கொள்ளலாம்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை புதுவருடப்பிறப்பை வீடுகளிலேயே எல்லோரும் கொண்டாடுவோம் என கூறியுள்ளார்.

Previous Post Next Post