கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் குறைவடையுமென எதிர்பார்பதாக தெரிவித்த அனில் ஜாசிங்க!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வரும் நாள்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்படுபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்.

அவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

எனவே வரும் நாள்களில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
Previous Post Next Post