ஊரடங்கு வேளையில் பட்டினியால் பரிதவிக்கும் ஈழ உறவுகளின் வீட்டு கதவை தட்டும் இவர் யார்?

பணக்காரன் வீட்டுப்பிள்ளையாக இருந்திருந்தால் மாடிவீட்டு காரனாக இருந்திருந்தால் அரசியல்வாதியின் பிள்ளையாக இருந்திருந்தால் பணத்தை அள்ளிவீசும் முதலாளியாக இருந்திருந்தால் அத்தனை ஊடகத்தின் முன் இவன்யார்? என்று தெரிந்திருக்கும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் வாழ்ந்து வரும் ஏழைகளின் வாழ்வை அறிந்து ஒருதுடிப்பான இளைஞன். வறுமை துன்பம் அத்தனையும் தாங்கிவாழும் மக்களின் மனநிலை அறிந்த சாதாரண குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வரும் இவன்.

ஒரு துவிச்சக்கர வண்டியில் பலகிராமத்தில் ஊரடங்கு வேளையில் பட்டினியால் பரிதவிக்கும் ஈழ உறவுகளின் வீட்டுக் கதவை தட்டும் ஓர் மனிதாபிமானம் கொண்ட சமூகசேவையாளன்.

வயதோ இளமை. ஏழைமக்களின் துன்பவியலை தாங்கமுடியாத மனசுடன் மிதி வண்டி மிதித்து ஏழைமனங்களை மினுங்க வைக்கும் ஓர் அற்புதமான மனிதன்.

உணவின்றி அலையும் பட்டினியால் வாழும் அத்தனை மனிதர்களையும் படம்பிடித்து தங்கள் ஊடகத்தின் வாயிலாக உலகறியச்செய்யும் அத்தனைபேரும் ஏன்..இவன்யார்...என்பதனை உலகுக்கு காட்ட முன்வரவில்லை.

உணவில்லை பசி பட்டி ஊரடங்கு கடை அடைப்பு ஊரடங்கு தளர்த்தல் அத்துமீறிய வியாபார நிலயங்களின் அடாவடி நகர்வுகள் அத்தனையையும் காட்டிய அத்தனை ஊடகங்களும் அவன்யார்? என்பதனை காட்ட மறந்தது ஏன்?


கால்வலி பசிவலி உடல்வலி அத்தனையுடனும் அவன் மனவலிமை கொண்டவனாக மட்டுமாநகரில் அனைத்துப் பகுதியிலும் ஏழைகளின் பசிபோக்க தன்னால் ஆன அத்தனை உதவிகளையும் பெற்று கஞ்சியாவது கிடைக்கட்டும் என்ற மனிதாபிமானப்பணியில் மனந்தளராது விடிகாலையில் வெளியேறி ராத்திரியில் தன்மனை நாடி தன்பசியாற்றும் காட்சி மனதை நெகிழவைத்தது.

துள்ளித்திரியும் ஜொலிபண்ணும் இளைஞர்கள் மத்தியில் இவன் .மக்கள் பசிதீர்க்க தன்னை அர்ப்பணித்தான்

தம்பி இன்னும் சில நாட்கள் நீண்டதூரமில்லை நீண்டநேரமில்லை நீ..யார் என்பது உலகத்திற்கே..தெரியும் காலமும் தூரமில்லை வாழ்த்துக்கள் ஏனையோருக்கும் எடுத்துக்காட்டாக உன்சேவை தொடரட்டும்.

Previous Post Next Post