பிறக்கும் சார்வரி தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசிக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. ராஜயோக அதிர்ஷ்டம் எப்போது தெரியுமா?

சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். பிறக்கும் சார்வரி தமிழ் புத்தாண்டில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.

ரிஷபம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டவர். கடவுளின் கருணை உங்களுக்கு இருக்கிறது. பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டு என்ன பலன்கள் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷபம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் 12 ஆம் வீடான மேஷம் ராசியில் தொடங்கி 11ஆம் வீடான லாப ஸ்தானமான மீனம் ராசி வரைக்கும் 12 மாதங்களில் சஞ்சரிப்பார். குரு பகவான் எட்டாம் வீடான தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கும் மகரம் ராசியில் இருந்து அதிசாரமாக கும்பம் ராசிக்கும் சஞ்சரிப்பார்.

இந்த ஆண்டு 8,9,10 ஆம் வீடுகளில் குரு செல்கிறார். சனிபகவான் ஒன்பதாம் வீட்டிலும் ராகு இரண்டாம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு நகர்கிறார். கேது பகவான் எட்டாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு நகர்ந்து உங்க ராசியை பார்க்கிறார்.

இந்த சார்வரி புத்தாண்டில் ரிஷபம் ராசிக்கு சர்வ வளங்களும் செல்வாக்கும் கிடைக்கப் போகிறது. இது பொதுவான பலன்கள்தான். சொந்த ஜாதகம், தசாபுத்தியை பொருத்து பலன்கள் மாறுபடும்.

பொன் பொருள் சேரும்
இந்த ஆண்டு உங்க எதிர்பார்ப்புகள் அதிகமாகும். தாராள மனதுக்காரர்கள் நீங்கள் தைரியமாக இருப்பீர்கள். இந்த ஆண்டு வசதிகள் அதிகமாகும். தொட்டது துலங்கும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

சுப காரியங்கள் நடக்கும். தொழில் வளர்ச்சி அதிகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். கடன் நோய் எதிரிகள் தொல்லை நீங்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்களுக்கு ராசியில் ராசி நாதன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செய்யும் தொழிலில் லாபம் வரும். புதிய தொழில் தொடங்குவீர்கள். நடைபெற்று வரும் தொழிலை விரிவு செய்வீர்கள்.

குடும்ப சந்தோஷம்
கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். ராகு பகவான் இரண்டாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம், ஆவணி மாதம் ராகு பெயர்ச்சியாகி உங்க ராசிக்கு வருகிறார். சின்னச் சின்ன குழப்பங்கள் வந்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். நிறைய பயன் கிடைக்கும் சர்வ சக்தி வல்லமை கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு சாதகமான அம்சம். ஆசிரியர்கள், மத குருமார்கள், பத்திரிகை துறையில் இருப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.

கணவன் மனைவி உறவில் இணக்கம் அதிகமாகும். சுப செலவுகள் அதிகம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாடு பயணம் ஏற்படும். உடல் நிலையில் கவனம் தேவை. சகோதர சகோதரிகளிடம் அனுசரித்து போங்க.

கல்வி
ரிஷபத்திற்க்கு 5ஆம் இடமான கன்னி ராசிக்கு, சனி பார்வை விலகி விட்டதால் மாணவர்கள், கல்வி கற்பதில் முன்னேற்றம் அடைவீர்கள். சோம்பல், அசதி இவையெல்லாம் தகர்த்தெறியப்பட்டு திடீர் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவீர்கள். மேல்படிப்பு படிப்பவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கும். உங்களின் முயற்சி முன்னேற்றத்தை தரும்.

பெண்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு சிறப்பானதாக இருக்கும். உடல் ரீதியாக மனரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பேசி பழகுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. கர்ப்பிணிகள் கவனமாக இருக்கவும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் வரும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வர்களுக்கு நல்ல லாபம் வரும். சொந்தமாக வீடு நிலம் வாங்கலாம்.

வீடு வாகன யோகம், பூமியால் யோகம் வரும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு மேல் யோகம் கை கூடி வரும். காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக மாறலாம். அரசு தொடர்பான வேலைகளை உடனே முடித்து விடுங்கள்.

ஆன்மீக பயணம்
மனதில் அமைதியை தரும். சார்வரி தமிழ் புத்தாண்டு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. அன்னை மகாலட்சுமியை வணங்கி வெள்ளிக்கிழமை தவறாது விரதம் கடைபிடித்தால் சந்தோஷங்கள் அதிகமாகும்.

ரிஷப ராசிக்காரர்கள் கொஞ்சம் பகட்டாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி நினைக்காமல், அனாவசிய பேச்சுகளை குறைத்து, உங்களது உழைப்பை அதிகப்படுத்தினால் உங்களுக்கான வெற்றிகளும் நிச்சயம் அதிகமாகத் தான் கிடைக்கும்.
Previous Post Next Post