உச்சம் பெற்ற சூரியன்... சனியுடன் கூட்டு சேரும் செவ்வாய்! திடீர் திருப்புமுனையால் ஏற்பட போகும் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?

மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்.இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார்.

சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். புத பகவான் ரிஷபம், மிதுனம் என பயணிக்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கும் பணவருமானம் அதிகம் இருக்கும். புத பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கும் திடீர் திருப்புமுனைகள் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது

மே மாதம் ரிஷபம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.ரிஷப ராசிக்காரர்களே
ரிஷப ராசிக்காரர்களே மே மாதத்தில் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன் புதன், ராசியில் சுக்கிரன், 2ஆம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. தன ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வீட்டில் உள்ளவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும்.

சுப காரிய தடைகள் ஏற்படும். அதே நேரம் உங்களுக்கு பண வருமானம் பிள்ளைகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஊரடங்கு உத்தரவினால் மன உளைச்சலில் இருக்கும் உங்களுக்கு நிம்மதி ஏற்படும். ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் 4ஆம் தேதிக்கு மேல் பத்தாம் வீட்டிற்கு நகர்கிறார். வேலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் நிரந்தரம் ஏற்படும்.

இந்த மாதம் மிகப்பெரிய மாற்றங்கள் வரலாம். உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறும். மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும். சொல்வாக்கு செல்வாக்கு உயரும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் வெளியில் சுத்தாதீங்க. புதிய முதலீடுகள் எதுவும் வேண்டாம்.

புதிய வேலை கிடைக்கும். தொழிலில் மாற்றங்கள் வரலாம். எதையும் யோசித்து பண்ணுங்க. புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் அளவாக பேசவும். பணம் யாருக்கும் கடன் கொடுக்காதீங்க ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

நல்ல வாழ்க்கை துணை அமைய வாய்ப்பு உள்ளது என்றாலும் கவனமாக இருங்க. திருமண பேச்சுவார்த்தை நடைபெறும். இந்த மாதம் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது.

குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக இருங்க. வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெண்கள் சமூக வலைத்தளங்களை அளவாக பயன்படுத்தவும். சுப விரைய செலவுகள் ஏற்படும். மகாலட்சுமியை வழிபடுங்கள் நன்மையே நடைபெறும்.மிதுன ராசிக்காரர்களே
நிம்மதி பிறக்கும் மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் ரொம்ப நல்ல மாதம் கடந்த மாதங்களில் வேலையில் பிரச்சினை, ஆரோக்கியத்தில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சினை என எல்லாமும் சேர்ந்து கும்மியடித்தது. இனி அப்படி இல்லை நீங்க இந்த மாதம் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

சொந்தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை தீரும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது. கொரோனா அச்சத்தின் பிடியில் சிக்கியிருந்தீர்கள் இந்த மாதத்தில் இருந்து உங்களுக்கு பயம் அகலும். அதே நேரத்தில் சூரியன் மாத பிற்பகுதியில் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருவது சிறப்பல்ல. வருமானத்திற்கு என்ன செய்வது என்று யோசிப்பீங்க.செவ்வாய் இடப்பெயர்ச்சியால் பிரச்சினைகள் தீரும். உங்க தைரியம் அதிகமாகும். வேலையிழப்பு. தொழில் வியாபாரத்தில் முடக்கம் என்று சிக்கல் இருந்து வந்தது.

இந்த மாதம் பிரச்சினை தீரும். மாத முற்பகுதியில் உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இது சரியில்லாத கால கட்டமாக உள்ளது. கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இப்போதைக்கு வெளிநாட்டு வேலையை ஒத்துக்கொள்ள வேண்டாம்.

மாணவர்களுக்கு கல்வி கற்பதில் இருந்த தடைகள் நீங்கும். சுப மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு அதிகரிக்கும்.

மாத பிற்பகுதியில் அப்பா வழி உறவினர்கள் மூலம் விரைய செலவுகள் வரலாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருங்க. எச்சரிக்கையாக இருங்க. நீங்க புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதளவில் சந்தோஷம் அதிகமாகும் புத்திரபாக்கியம் கிடைக்கும். உங்க ராசியில் ராசிநாதன் புதன் ஆட்சி பெற்று அமர்கிறார். கூடவே உங்க ராசியில் ராகு இருப்பதால் நல்ல பலம் கிடைக்கும் யோகங்கள் அதிகமாகும். நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தலாம் பணப்புழக்கம் அதிகமாகும்.மாத பிற்பகுதியில் உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தடைபட்டு வந்த சுப காரியங்கள் நல்ல முறையில் திடீர் அதிர்ஷ்டங்கள் வரலாம். நீங்க நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வயது மூத்தவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

இந்த மாதம் ராகு காலத்தில் துர்க்கையை நினைத்து விளக்கேற்றி வழிபடுங்க. லட்சுமி கடாட்சம் உண்டு. மிதுனம் ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனைகள் நிறைந்த மாதம். இந்த மாதம் 12ஆம் தேதி காலை 10 மணிமுதல் 14ஆம் தேதி இரவு 7.22 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க.
Previous Post Next Post