ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தகவல்! அரசாங்க தரப்பு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மேல் மாகாணத்தில் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னரும் ஊரடங்கு சட்டம் தளர்த்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாதென அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு மேல் மாகாணத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களை தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கினாலும், மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது என அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் பேர் தற்காலிகமாக தங்கியிருக்கின்றனர். அவர்களில் 5 லட்சம் பேரை தங்கள் சொந்த இடங்களுககு அனுப்புவதற்கு அரசாங்கத்திடம் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைக்கமைய போக்குவரத்திற்கான 3 பஸ் வண்டிகளை பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகின்றது.

ஆபத்தான வலயங்களாக பெயரிடப்பட்ட பகுதிகளிலிருந்து வெளி பிரதேசத்திற்கு செல்பவர்கள் தங்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்த வேண்டும். அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருந்தாலும் அது அவரது குடும்பத்தினருக்கும் அவர் தங்கியிருக்கும் பகுதிக்கே ஆபத்தாகிவிடும் என சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உள்ள சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் இந்த நிலைமையிலேயே காணப்பட்டால் 20 ஆம் திகதி பின்னர் ஏனைய பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post