ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. மீன ராசிக்கு தேடிவந்த யோகம்.. என்ன தெரியுமா?

ராகு கேது பெயர்ச்சியினால் மீனம் ராசிக்காரர்களுக்கு கனவுகள் கைகூடி வரும் காலம் வந்து விட்டது.

எண்ணங்கள் நிறைவேறும். ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி யோகம் தேடி வரும். சிலருக்கு இடமாற்றமும் முன்னேற்றமும் நிகழப்போகிறது.

ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல சுப காரியங்கல் நிறைந்ததாகவும் இருக்கும்.

கேது இருக்கும் இடத்திலிருந்து 5ம் இடமாகா மீனம் அமைவதால் அவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும். இதனால் சுப காரியங்கள் நடைப்பெறுவதோடு, முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

அதே போல் ராகு இருக்கும் ஸ்தானத்திலிருந்து 10ம் இடத்தில் மீன ராசி இருப்பதால் அதாவது கர்ம, தொழில் ஸ்தாம் இருக்கின்றது. இதனால் மீன ராசிக்கு தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும்.

தொழில் சார்ந்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதோடு, நல்ல லாபத்தையும் தரும்.

பூர்வ ஜென்ம புண்ணியம், முன்னோர்களின் ஆசி கிடைப்பதால் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகளான சுப நிகழ்ச்சிகள் நடக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

அதே போல் இதுவரை தொழில், வியாபார முன்னேற்றம் தடை நீங்கி சிறப்பான பலன்கள் எதிர்பார்க்கலாம்.

குடும்ப விருத்தி, திருமணம் வாயிலாகவோ அல்லது குழந்தைப் பேறு மூலம் நடக்கும். உடல் நலத்தில் கவனம் எடுத்துகொள்வது அவசியமான ஒன்றாகும்.
Previous Post Next Post