துணி துவைக்கும் இயந்திரத்தில் சுழல்வதுபோன்ற உணர்வு: கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் லண்டன் மருத்துவரின் அனுபவம்

கொரோனா பாதிப்பு எண்ணற்ற விடயங்களை தமக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக, அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் மருத்துவர் நீரஜ் பாட்டில் தெரிவித்துள்ளார்.

மருத்துவரும் அரசியல்வாதியுமான லண்டன் வாழ் இந்தியர் நீரஜ் பாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியை சேர்ந்த இவர் லண்டனில் உள்ள சென்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அவசரகால மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அவருக்கு கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, விடுவிக்கப்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்துவருகிறார்.

கொரோனா பாதிப்பு குறித்து தெரிவித்த அவர், கொரோனா பாதிப்பு மிகவும் பயங்கரான உணர்வு. துணி துவைக்கும் இயந்திரத்தில் சுழல்வதுபோன்ற உணர்வு.

நான், ஏழு கிலோ உடல் எடை குறைந்துள்ளேன். அதனால், கொரோனாவுக்கு நன்றி கூறுகிறேன். டயட்டிலிருந்து, உடற்பயிற்சி செய்து குறைக்க முடியாத எடையை தற்போது குறைத்துவிட்டேன்.

கொரோனா பாதிப்பு குறித்தும், மருத்துவமனை நாள்கள் குறித்தும் பேசிய அவர், மருத்துவமனையிலிருந்து குடியிருப்புக்கு திரும்பி விட்டேன். தற்போது, வீட்டிலிருக்கும் நான் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்.

என்னை, நானே மருத்துவமனையிலிருது டிஸ்சார்ஜ் செய்துகொண்டேன். ஒருவேளை இன்னமும் மருத்துவமனையில் இருந்தால், நான் தற்கொலை செய்துகொள்வேன்.

மருத்துவமனை தரும் மனவேதனை போதும் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கு. இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது லண்டன் மருத்துவமனை கல்லறை போன்று உணர்வைத் தருகிறது.

மிகவும் வேதனையானது. இதனை எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை. உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கொரோனா உள்ளது. ஆரோக்கியமாக உள்ளவர்கள் கூட மன அழுத்தத்தில் உள்ளனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவரும் மனிதர்கள்தான். அவர்கள், அனைவரும் அவர்களது உயிரைப் பணயம் வைக்கின்றனர்.

இந்த உயிர் காக்கும் போராட்டத்தில் எத்தனை பேர் உயிரிழப்பார்கள் என்பது தெரியவில்லை. தனிமையில் இருந்த காலத்தில் மனித இனத்தின் பலவீனத்தை எதிரொலிக்க முடிந்தது. எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.

இதுவரையில் நாம் பார்த்தது அல்லது அனுபவப்பூர்வமாக உணர்ந்ததுதான் நம்முடைய சுயம். இது எப்போதும் மனிதனின் புரிதலுக்கு அப்பால்தான் இருக்கும்.

ஏதோவொன்றை புதிதாக கற்றுக்கொடுத்தற்காக நான் கொரோனாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாம் வீட்டிற்குள் இல்லையென்றால் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவிடும்.

இது ஒருவேளை நடைபெற்றால் மக்கள் பிளேக் போன்றவற்றை புரிந்துகொள்ள நேரிடும். வைரஸ் என்பது சிறிய ஆர்.என்.ஏ மூலக்கூறு.

இது நமக்கு ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது. மக்களின் வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது. இந்த உலகம் தற்போது வித்தியாசமான கிரகம். கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் என்று பிரிக்க முடியும்’ என்று மருத்துவர் நீரஜ் பாட்டில் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post