ஓம் சாய் ராம் – இது வெறும் மந்திரமல்ல வாழ்க்கையை புரட்டிப் போடும் வழிகாட்டும் தந்திரம்..!

மகாராஷ்ட்ரா மாநிலம் கோதாவரிக் கரையில் சீரடியில் தன்னை வெளிப்படுத்திய மகான் சாய் . உலகெங்கும் கோடானு கோடி மக்கள் ஒவ்வொரு நொடியும் , மூச்சு விடும்போதெல்லம் ஜெபிக்கும் மந்திரம் சாய் ராம். சாய் ராம் என்று சொல்லும் போதே மனதில் கவலைகள் நீங்கி நம்பிக்கை பிறக்கின்றது. இருள் விலகி வெளிச்சம் தென்படுகிறது.

தீராத பல சிக்கல்களின் முடிச்சுகளை தனது சாந்தமான கருணைப் பார்வையினால் களைந்து விடுகிறார் கருணாமூர்த்தியான சாய் மகாராஜ் .இந்த நூற்றாண்டில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றஞானிகளில் சீரடி சாயி பாபா மகத்தானவர். மதங்களை கடந்து மனிதர்கள் மிகுந்த உரிமையுடன் , நம்பிக்கையுடன் அவரது சமாதியை நாடி , நாள்தோறும் ஓடி வருகிறார்கள்.சமாதி நிலையிலும் தன்னை நாடிவரும் தன்னுடைய பக்தர்களை வெறும் கையுடன் என்றும்அவர் அனுப்புவதில்லை . பொறுமை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை தான் பாபா தன்பக்தர்களிடம் எதிர்பார்ப்பது . இவரின் பிறப்பு மற்றும் வயதை இதுவரை யாராலும் அறுதியிட்டுகூற முடியவில்லை . தன்னுடைய பக்தர்களால் சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் ‘சாய் பாபா ‘ ‘அவர்கள் இந்தியாவில் உள்ள மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள சீரடிக்கு1854-ம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் வருகை புரிந்தார்.முதன்முதலாக சீரடி கிராமத்து மக்கள் அவரை , மசூதி ஒன்றில் அருகாமையில் அமைந்திருந்த வேப்பமரத்தின் அடியில் தியானத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தரிசித்தார்கள் .வயதில்இளைஞராக காட்சியளித்தாலும் , அவரது முகத்தில் தெரிந்த தேஜஸே முக்காலமும்கற்றுணர்ந்த ஒரு மகானாக மக்களின் கண்முன் தோற்றுவித்தது . அந்த இளம் வயதிலேயே தன்னை நாடிவந்த மக்களுக்கு ஆன்மீக வழியை காட்டினார் . சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை ,மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்ததால் ,அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் கூடஆரம்பித்தனர்.வெறும் வாய்மொழி தத்துவங்களோடு நிற்காமல் , உடல் நலம் வேண்டி தன்னை நாடிவருபவர்களுக்கு தன்னுடைய வரம் நல்கும் கரத்தால் ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக்குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், மற்றும் மகத்துவம் மதங்களை தாண்டிஅனைத்து தரப்பு மக்களையும் தேனை நோக்கி கவரப்பட்ட தேனீக்களாக சீரடி நோக்கி செல்லவைத்தது .
Previous Post Next Post