அதிசாரமாக செல்லும் குரு.... விருச்சிகம் ராசிக்கு வெற்றி மீது வெற்றி வரும்! சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்

சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது.

ரொம்ப குதூகலமாக இருக்கப் போகிறீர்கள். இது பொதுவான பலன்தான். ஜாதகத்தில் கிரகங்கள் சேர்க்கை, தசாபுத்தி நடப்பதை பொருத்து பலன்கள் மாறுபடலாம்.

ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார்.

குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

மார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது.

சார்வரி விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டு பொன்னான ஆண்டாக இருக்கப்போகிறது. ஆண்டு முழுவதும் கிரக சூழ்நிலைகள் நன்றாக இருப்பதால் அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. உங்க குடும்ப கஷ்டங்கள் தீரும். பிரச்சினைகள் அனைத்தும் தீரும். நிறைய சந்தோஷங்கள் நடக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குருவினால் குதூகலமாக இருக்கப் போகிறீர்கள். வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும்.

ஆரோக்கியம் அற்புதம்
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். ரொம்ப சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். பணம் சேமிப்பு அதிகமாகும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் மருத்துவ செலவுகள் குறையும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் நினைத்த காரியம் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல பதவிகள் தேடி வரும்.

புதிய வேலை கிடைக்கும்
வேலை செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல ஆண்டு. கால சூழ்நிலையால் வெளிநாட்டில் வேலை போச்சே என்று கவலைப்படுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்படாதீங்க. நிறைய பேர் வேலையே இல்லாம கஷ்டப்படுறாங்க உங்களுக்கு நல்ல வேலை இருக்கே என்று சந்தோஷப்படுங்க. திறமையை அதிகம் வெளிப்படுத்துங்க. கடுமையாக உழைக்கணும் வேலை உங்களுக்கு தங்கும்.

கோபம் வேண்டாம்
குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். அதிசாரமாக சென்ற குரு பகவான் மீண்டும் வக்ரமடைந்து ஆனி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரண்டாவது வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். நவம்பர் மாதம் மீண்டும் குரு மகரம் ராசியில் சஞ்சரிப்பார் பண விசயத்தில் கவனமாக இருங்க. சிக்கனமாக செலவு செய்யுங்கள். திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

பொறுமை தேவை
பெண்களுக்கு இந்த ஆண்டு பொன் பொருள் சேர்க்கை அதிகமாகும். உறவினர்களிடம் பொறுமையாக இருங்க. கோபப்பட்டு பேசாதீங்க. உங்க பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும்.

பரிகாரம்
மாணவர்கள் நல்லா படிங்க கவனத்தை படிப்பில செலுத்துங்க. முழு முயற்சியோடு படித்தால் நல்லா தேர்வு எழுதலாம். நல்ல நண்பர்களுடன் பேசி பழகுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆசி கிடைக்கும். ஆவணி மாதம் ராகு பகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டிற்கும் கேது உங்க ராசிக்கும் வருகிறார். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுங்க. விநாயகப்பெருமானை சரணடைங்க. சங்கடஹர சதுர்த்தி நாளில் தவறாமல் வெற்றிலை மாலை சாற்றி வணங்குங்கள் நன்மைகள் நாடி வரும்.
Previous Post Next Post