பொது போக்குவரத்து பயன்பாடு தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட மாவட்டங்களில் பொது போக்குவரத்து அந்தந்த மாவட்டங்களின் எல்லைக்குள் மட்டுமே இயக்க முடியும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள பகுதிகளில் பொது போக்குவரத்து இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து அந்த மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்படும். பொது போக்குவரத்து சேவைகள் மாவட்டங்களுக்கு இடையே செயல்பட அனுமதிக்கப்படவில்லை.


பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு கை சுத்திகரிப்பு பொருட்கள் வழங்கப்படும், அதே நேரத்தில் கை சுத்திகரிப்பு பொருட்கள் அனைத்து பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் கிடைக்கும்.

பொதுப் போக்குவரத்தில் தேவையற்ற பயணத்தைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கொரோனா பரவுவதை தடுக்க சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் வழங்கிய வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

பொது போக்குவரத்து சேவைகளை நடத்துபவர்களுக்கு முகக்கவசங்களும் கட்டாயமாகும்.

பேருந்துகளில் இருக்கைகள் zigzag வடிவத்தின் கீழ் இருக்கும், ஒவ்வொரு பயணத்திற்கும் பிறகு அனைத்து பேருந்துகளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என அவர் கூறினார்
Previous Post Next Post