ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய தகவல் இதோ!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று மாலை வெளியிட்ட விசேட அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டங்களுக்குமான ஊரடங்கு சட்டம் மே மாதம் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்து நீடிக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும்.

மே மாதம் முதலாம் திகதி வரை காலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மணிக்கு அமுல்ப்படுத்தப்படும்.

கொழும்பு , கம்பஹா , களுத்துறை , புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் துறையினர் 4 ஆம் திகதிக்கு பின்னர் செயற்படக் கூடிய வகையில் சட்டங்கள் தளர்த்தப்படவுள்ளன. தனியார் துறையினர் காலை 10 மணிக்கு தமது வேலைகளுக்கு செல்ல முடியும் என ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குமான ஊடரங்கு சட்டம் நீக்கப்படுவதாக இன்று பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post