தெஹிவளையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பான தகவல்

கொழும்பு, தெஹிவளையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி பிரித்தானியா சென்று நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 15ஆம் திகதி மற்றுமொரு நபருடன் குறித்த நபர் நாடு திரும்பியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் நாடு திரும்பிய பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து 12 நாட்களின் பின்னரே அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபருடன் இலங்கை வந்த மற்ற நபருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, அவரது வீட்டில் இருந்த 6 பேர் நேற்று பிற்பகல் பொது சுகாதார பரிசோதகர்களால் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post