ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கடக ராசிக்கு அள்ளிக்கொடுக்க போகும் ராஜகுரு..!

ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்கு 1.9.2020 வரை எப்படிப்பட்ட பலன்களை தரும் என்பதை இங்கு பார்ப்போம்.

பேச்சில் வல்லவர்களான கடக ராசியினர்களே... சிறிது சுயநலவாதியான நீங்கள் எப்படிப்பட்ட சூழலையும் உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கெட்டிக்காரர்கள்.

நண்டைப் போல வேகமாக நடக்கும் நீங்கள், ஆபத்து என்றால் காத்துக் கொள்ள மறைந்து கொள்வதுண்டு. இருப்பினும் நீங்கள் எதிர் பாலினத்துடன் சற்று கூடுதல் கவனமாக இருப்பது அவசியம்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தளவில் சிறப்பாக இருக்கும். அவ்வப்போது பணியின் காரணமாக அலைச்சல், மன உளைச்சல் ஏற்படலாம். இருப்பினும் இது படிப்படியாகக் குறையும்.

குடும்பத்தில் பண வரவு சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியான சூழல் தான் நிலவும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் பாக்கியமுண்டு.

உத்தியோகத்தைப் பொறுத்தவரையில் முன்னேற்றம் காணக்கூடிய அமைப்பு உள்ளது. இதுவரை எதிர்பார்த்து வந்த ஊதிய, உத்தியோக உயர்வு சந்திக்க உள்ளீர்கள்.

தொழில், வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு லாபம் பெறக்கூடிய சிறப்பான அமைப்பு உள்ளது. உங்களின் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் ரீதியான பயணங்கள் இருக்கக் கூடும். இதனால் அலைச்சல் உண்டாகலாம். இருப்பினும் எதிர்பார்த்த உதவிகளும், லாபமாகும் கிடைக்கக் கூடிய அருமையான காலம்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை காணக்கூடிய நிலை உண்டு. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை நன்மையைத் தரும். கல்வியில் கவனம் செலுத்த சிறப்பான மதிப்பெண் பெறுவீர்கள்.

கொடுக்கல் வாங்கல் விஷயங்களை குறைத்துக் கொள்வது மிக அவசியம். சுப காரிய பேச்சு வார்த்தையில் சற்று அலைச்சல் இருக்கும். இருப்பினும் உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கக் கூடும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு இருக்கும். மொத்தத்தில் சோதனைகளைக் கடந்து சாதனையை படைக்கக் கூடிய காலமாகும்.

பரிகாரம்:
அடிக்கடி விநாயகர் கோயிலுக்கு சென்று வருவது நல்லது. சங்கடஹர சதுர்த்தி தினத்தில் அருகம் புல் மாலை சாற்றி கணபதியை வணங்கி வருவது நல்லது.

பௌர்ணமி தினத்தில் அம்பாளுக்கு குங்கும அபிஷேகம் செய்வது சிறப்பு.
Previous Post Next Post