தமிழ் வருட புத்தாண்டில் லாப சனியுடன் சேரும் லாப குரு! மீன ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்!

சார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வரும். நினைத்தது நிறைவேறும் ஆண்டாக பிறக்கப் போகிறது. இது பொதுவான பலன்தான்.

ஜாதகத்தில் கிரகங்கள் சேர்க்கை, தசாபுத்தி நடப்பதை பொருத்து பலன்கள் மாறுபடலாம். ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது.

சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார். மார்கழி மாதத்தில் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது.

இந்த கிரகங்களின் சஞ்சாரம் பார்வை பல ராசிக்காரர்களுக்கு சந்தோஷங்களை தரப்போகிறது. சார்வரி வருடம் பிறக்கும் போது மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது.

புது வருடம் தொடங்கும் போது மீனம் ராசியில் புதன் இரண்டாம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன் நான்காம் வீட்டில் ராகு லாப ஸ்தானத்தில் குரு, சனி, செவ்வாய், பத்தாம் வீட்டில் சந்திரன், கேது என கிகரகங்கள் சஞ்சாரம் உள்ளது

ஆரோக்கியம் சிறப்பு
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உற்சாகமும் ஆரோக்கியமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நீங்க நினைத்தது நிறைவேறும் மண்ணை தொட்டது பொன்னாகும். உங்களுக்கு பணம் பல வழிகளில் வரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வீடு மனை வாங்குவீர்கள். வியாபாரத்திற்காகவும் வேறு சுப செலவுகளுக்காகவும் பட்ட கடன்களை இந்த ஆண்டு அடைத்து விடுவீர்கள்.

லாபமான ஆண்டு
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவத்திற்காக செலவு செய்து வந்தீர்கள். இனி அந்த பிரச்சினை இருக்காது. உங்க ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவுக்காரர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் இந்த ஆண்டு உங்களுக்கு லாபம் வரும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபத்தை கொடுக்கும். பணம் அதிகமாக வருகிறதே என்று அதிக ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். பணத்தை சேர்த்து வைக்காட்டி நெருக்கடிக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

சுப செலவுகள் வரும்
இந்த ஆண்டு உங்களுக்கு சுப செலவுகள் அதிகம் நடைபெறும். பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னால் நின்று நடத்துவீர்கள். இப்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் வேலையும் இல்லை சம்பளம் சரியாக வரலையே என்று கவலைப்பட்டு வந்த உங்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும் கவலைப்படாதீங்க. இந்த நெருக்கடிகள் இன்னும் சில மாதங்களில் சரியாகும். லாப சனி, லாப குரு, முயற்சி ஸ்தானத்திற்கு வரும் ராகு பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேதுவினால் உங்களின் சிக்கல்கள் தீர்ந்து விடும்.
Previous Post Next Post