வக்ரமடைந்து சஞ்சரிக்கும் சனி, குரு, சுக்கிரன்! தனுசு ராசியின் வாழ்க்கையில் ஏற்பட போகும் திடீர் மாற்றம்... யாருக்கு பேரதிர்ஷ்டம்?மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார்.

உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார்.

சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். இந்த மாதம் சனி, குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் வக்ரமடைந்து சஞ்சரிக்கின்றன.

இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடம் மாற்றங்களினால் துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களே இந்த மாதத்தில் உங்களுக்கு சூரியன் புதன் ஏழாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார். சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது.

இந்த மாதத்தில் இருந்து பல தடைகள் விலகும், கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

பணவருமானத்தில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் இருந்து சம்பள பாக்கி வரும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வர வாய்ப்பு உள்ளது. சுப காரியத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும் மனதில் ஏற்பட்டிருந்த கவலைகள் தீரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களே உங்க ராசி அதிபதியாக உங்களுக்கு சுகமான மாதமாக அமையப்போகிறது. வீடு கட்டணும்னு ரொம்ப நாளாக நினைச்சிட்டு இருக்கீங்க.

இந்த மாதம் அதுக்கான ஏற்பாடுகளை பண்ணுங்க அதற்கான யோகம் வந்து விட்டது. உங்க மூத்த சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.

மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த மாதம் வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரப்போகிறது. வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். உங்க வியாபாரம் ரொம்ப நல்லா இருக்கும்.

நல்ல உழைப்பாளி நீங்க உங்களுக்கு தேவையான நல்ல பணி தேடி வரும். நெருங்கிய நண்பர்கள் கிட்ட நீங்க கவனமாக பேசுங்க. குடும்பத்தில் பிரச்சினைகள் தலை தூக்கும் விட்டுக்கொடுத்து போங்க. பேச்சில் கவனமாக இருங்க யார் கிட்டையும் கோபமாக பேசவேண்டாம்.

வண்டி வாகனத்தில் எதற்காகவும் வெளியே போக வேண்டாம். மாத பிற்பகுதியில் வேலையில் சில சிக்கல்கள் வரலாம் கவனமாக இருங்க. குல தெய்வ வழிபாடு குறைகளை தீர்க்கும் நம்பிக்கையோடு இருங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதத்தில் ரொம்ப மாற்றங்கள் ஏற்படப்போகுது. பண வருமானத்தில் ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கும்.

இப்போது வேலையில் பிரச்சினை, உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை என ஒரே பிரச்சினை மயமாக இருக்கேன்னு ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீங்க.

கவலைப்படாதீங்க காலம் மாறும். கிரகங்களின் மாற்றம் மனதிலும் உடலிலும் மாற்றங்கள் ஏற்றங்களை கொடுக்கும் என்றாலும் பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க.

அப்பாவிடம் அக்கறை காட்டுங்கள். அரசு தொடர்பான வேலை செய்பவர்களை விமர்சனம் செய்யாதீங்க. வியாபாரத்தில் லாபம் வரும், கடன் வாங்கவும் அதை பிசினசில் முதலீடு செய்வது பற்றியும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.

படிப்பில நல்லா கவனம செலுத்துங்க. கிடைக்கிற வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கங்க. வயது மூத்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். நோய்கள் நீங்கும். உயர்வும் உற்சாகமும் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது.
Previous Post Next Post