ஊரடங்குச் சட்டம் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட தகவல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது.

அந்த வகையில் ஸ்ரீலங்காவில் ஊரடங்கு முழுமையாக எப்போது நீக்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,“தொடர்ந்து 28 நாட்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லாவிட்டால் மட்டுமே தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை எந்த பிரச்சனையும் இல்லாமல் நீக்க முடியும்” என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்றைய தினம் தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் எதிர்வரும் 1ஆம் திகதி அமுல்படுத்தப்பட உள்ளது.

மேலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு மே மாதம் 4ஆம் திகதி ஊரடங்கு தளர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post