நேற்றிரவு அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பான தகவல்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 பேர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 6 பேர் நீர்கொழும்பு, சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஞாயிற்று கிழமை ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டது. அதற்கமைய நேற்றிரவு புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 பேர் குறித்த சாரதியுடன் நெருங்கி செயற்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதேச சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உறுதி செய்த கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 28 பேரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர். எனினும் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் பிரதேசங்கள் முழுவதும் சுற்றித் திரிந்துள்ளனர்.

இவர்கள் போதைப் பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர்கள் என்பதனால் பிரதேசம் முழுவம் போதை பொருள் தேடி அலைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Previous Post Next Post