இந்த தமிழ் புத்தாண்டு முதல் மேஷம் ராசிக்கு எதிர்பாரமல் கிடைக்கும் அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா?

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சிறந்த வருடமாக இருக்கப்போகிறது. சார்வரி வருடம் உங்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த வருடத்தை தொடங்கலாம்.

எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி உண்டு. உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற போகிறது. பணவரவிற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. பண வரவு அதிகமாக இருந்தாலும், பிற்காலத்தில் தேவைப்படும் என்று சேமிப்பு செய்வது நல்லது.

எல்லா வெற்றியையும் அடைய வேண்டுமென்றால் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மட்டும் சற்று மனதில் கொள்ளவேண்டும். முடிந்த வரை யாரிடமும் அனாவசியமான வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

சொந்தத் தொழில் சிறப்பாக நடக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரை வாங்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் அலுவலகத்தில் உங்கள் கை தான் ஓங்கி நிற்க போகிறது.

இந்த வருடத்தின் இடைப்பட்ட காலத்தில் புது புது வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும். நீங்கள் தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வருடம் முழுவதும், முடிந்தவரை கடன் வாங்காமல் தவிர்த்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கினால் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். கடனை நீங்கள் யாருக்காவது கொடுப்பதாக இருந்தாலும் உஷாராக இருந்து கொள்வது அவசியம்.

ஆக மொத்தத்தில் பண பரிமாற்றத்தின் போது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.
Previous Post Next Post