இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

ஊரடங்கு சட்டம் தொடர்பில் இலங்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் கொழும்பு, கம்பஹா,களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) காலை ஐந்து மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.


இது தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 24ஆம் திகதி இரவு எட்டு மணி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி காலை ஐந்து மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.மேலும், 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post