தகவல்களை மறைத்த கொரோனா தொற்றாளர்! வைத்தியர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஏற்பட்ட நிலை

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகத் தகவல்களை மறைத்து சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு, ஒருகொடவத்தைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் அங்கிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் 4 வைத்தியர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வசந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, உலகில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இது வரையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 74 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையிலும், 178 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏழு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post