எடுத்த காரியத்தில் வெற்றி தரும் அனுமன் காயத்ரி மந்திரம்

சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள்.

வானரத் தலைவன் கேசரிக்கும் – அஞ்சனா தேவிக்கும் மகனாவார். பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்த பிரம்மச்சாரி இவர். சிவனின் அவதாரமாக கருப்படுகிறார். வாயுப்புத்திரன், சொல்லின் செல்வன், சுந்தரன், ஆஞ்சநேயர், மாருதி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.சூரியனிடம் இருந்து பல கலைகள் கற்ற சீடராவார். ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின் நாயகனாகத் திகழ்பவர். வைணவ திருத்தலங்களில் அனுமனுக்கென தனி சன்னிதி உண்டு. அனுமனுக்கு அஷ்டமா சித்தியையும், சிரஞ்சீவி தன்மையையும் சீதாதேவியே வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள்.

இவருக்கான காயத்ரி மந்திரம்..

“ஓம் வாயு புத்ராய வித்மஹே
ராம பக்தாய தீமஹி
தந்தோ ஹனுமன் பரசோதயாத்”
Previous Post Next Post