எப்படிப்பட்ட சந்தரப்பத்திலும் விட்டுட்டு போகமாக காதலிக்க இந்த ராசிக்காரங்களால்தான் முடியுமாம்...!

சிலர் தன்னை விட எப்போதும் தங்களின் துணைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இந்த குணம் சிலருக்கு இயற்கையாகவே இருக்கும், அதற்கு காரணாம் அவர்களின் பிறந்த ராசியாக இருக்கும்.

இவர்கள் தாங்கள் எந்த முடிவு எடுத்தாலும் முதலில் தங்கள் துணையை மனதில் வைத்துதான் அதனை எடுப்பார்கள்.

தன்னை விட தங்கள் துணையைத்தான் இவர்கள் அதிகம் நேசிப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையை இவ்வளவு நேசிப்பார்கள் என்று பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதிக உள்ளுணர்வு கொண்டவர்கள், எனவே அவர்கள் தங்கள் துணையின் தேவை என்பதை அவர்கள் சொல்லாமலேயே அறிவார்கள். இவர்கள் ஒருவருடன் கமிட் ஆகிவிட்டால் எந்த சூழ்நிலையிலும் அந்த உறவில் இருந்து வெளியேறக்கூடாது என்று தனக்குள்ளேயே சத்தியம் செய்துகொள்வார்கள். தங்கள் துணையை பயமுறுத்தும் செயல்களையோ அல்லது வருத்தப்படுத்தும் செயல்களையோ ஒருபோதும் செய்யமாட்டார்கள். தங்கள் துணையை காயப்படுத்தும் செயல்களை ஒருபோதும் இவர்கள் வேண்டுமென்று செய்யமாட்டார்கள். எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் இவர்கள் தங்களின் சமநிலையை இழக்க மாட்டார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு தங்களின் துணைதான் எல்லாமே, தங்களின் காதலருக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் தங்களின் காதலுக்கு நல்லது என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும். உணர்ச்சி இணைப்பு என்பது கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும், தங்களின் தேவையை இரண்டாம் இடத்தில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இவர்கள் அறிவார்கள். இவர்கள் எதை செய்தாலும் அதனை தங்கள் துணை மீதிருக்கும் அன்பினால் செய்கிறார்கள், அதற்கு கைமாறாக இவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. தங்கள் துணையை அன்பாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வது தங்கள் கடமை என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் துணையை நம்பிவிட மாட்டார்கள். ஆனால் அவர்களின் துணைஇவர்களின் நம்பிக்கையை சம்பாதித்து விட்டால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். தங்களின் அனைத்து திறன்களையும் பயன்படுத்தி தங்களின் துணையை அவமானம், தர்மசங்கடம், தொல்லைகளில் இருந்து பாதுகாக்க முயலுவார்கள். இவர்கள் நம்பகமானவர்கள், பொறுமையானவர்கள் தங்களின் துணைக்கு தங்களின் தேவை இல்லாதபோது கூட அவர்களுக்காக காத்திருப்பார்கள். சவாலான காலங்களில் தங்கள் துணையை பாதுகாக்கும் கவசமாக இவர்கள் இருப்பார்கள்.

துலாம்
காதலில் விட்டுக்கொடுத்து செல்வது எவ்வளவு நன்மைகளை அளிக்கும் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும், எனவே தங்கள் காதலருக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பதட்டமான சூழ்நிலையில் இவர்கள் தங்களின் துணையின் செயல்களுக்கு எதிர்வினையாற்றுவதற்கு முன் அவர்களின் இடத்தில் இருந்து சூழ்நிலையை பார்ப்பார்கள். தங்களின் துணைக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருப்பார்கள், அவர்களுக்கு எப்போதும் ஆதரவாகவும், பாதுகாக்கப்பவராகவும் இருப்பார்கள். காதலில் எப்பொழுதும் நியாயமாக இருக்கும் இவர்கள் தங்கள் துணையை எளிதில் வெல்ல அனுமதிவிடுவார்கள்.

மீனம்
இயற்கையாகவே மீன ராசிக்காரர்கள் தன்னலமற்றவர்கள், எப்போதும் மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்துவார்கள். காதல் என்று வரும்போது இது மேலும் அதிகமாகவே இருக்கும். தங்கள் துணை மீது அன்பாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது மட்டுமின்றி அவர்களை சொந்த யோசனைகளும், ஆசைகளும் கொண்ட தனிநபர் என்று நினைக்க வேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள். இதனால் இவர்களின் காதல் வித்தியாசமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் தங்கள் துணையுடன் ஆலோசிப்பதை இவர்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
Previous Post Next Post