அம்பாறையின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்

அம்பாறையின் இரண்டு பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

உஹன, தமன பகுதியில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.

பொலனறுவையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட கடற்படை சிப்பாய் பழகியிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் வெலிஸர முகாமில் அவருடன் பழகியிருந்த அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. அதில் 29 பேருக்கு தொற்று இருக்கக் காணப்பட்டது.

ஜா எல பகுதியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை தேடிப்பிடித்து அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப இந்த சிப்பாய்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இப்போது முகாமில் இருந்து விடுமுறையில் சென்ற கடற்படை சிப்பாய்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு அம்சமாக அம்பாறை – உஹண – தமன பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
Previous Post Next Post