கர்ப்பிணி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின், கர்ப்பிணிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.காய்ச்சல், இரத்தம் வெளியேறல், கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் பிரச்சினை, வலிப்பு, பார்வை குறைபாடு, மார்பு, வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைவு, உடல் வீக்கம் உள்ளிட்ட, ஏனைய அறிகுறிகள் இருப்பின், கர்ப்பிணிகள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வைத்தியசாலைகளில் சன நெரிசலைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கிளினிக் செல்ல வேண்டுமாயின், கர்ப்பிணிகள் அது குறித்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post