வரும் தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே மிதுன ராசிக்கு சனி பகவனால் ஏற்படும் மாற்றம்.. அதிர்ஷ்டத்தை கொடுப்பாரா?

மிதுன ராசிக்காரர்களே, இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு சில சங்கடங்களையும், பல நன்மைகளையும் தரக்கூடியதாக அமையப்போகின்றது. இந்த சார்வரி தமிழ் புத்தாண்டின் தொடக்கத்தில் எட்டாம் வீட்டில் சனியும் குருவும் சேர்ந்து சங்கடங்களை தருவாரோ என்று பயப்பட வேண்டாம். குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை கிடைக்கிறது.

குடும்பம் குதூகலமாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். புதிய வேலை கிடைக்கும். சந்தோஷம் படிப்படியாக அதிகரிக்கும் என்றாலும் எட்டாம் வீட்டில் இருக்கும் சனி சங்டங்களை தருவார்.

பேச்சில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் சனிபகவான் அலைச்சலை ஏற்படுத்தி விடுவார்.

மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு படிப்பில் கவனமாக இருங்க. ஆர்வம் குறைவது போல இருக்கும் எனவே நண்பர்கள் வட்டத்தில் கவனமாக இருங்க.

எதிர்பாலின நட்புக்களிடம் கவனமாக இருங்க இல்லாவிட்டால் செய்யாத தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். உங்க ராசிக்கு இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தை சனி, குரு பார்வையிடுவதால் வாக்கில் கவனமாக இருங்க.

கண்டச்சனியால் கணவன் மனைவி பிரச்சினை இருப்பவர்கள் கொஞ்சமாவது விட்டுக்கொடுத்து போங்க. காரணம் அஷ்டம சனி ஆட்டித்தான் வைப்பார். சனியோட பார்வையும் சரியில்லை.

எனவே நீங்க பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பேசும் வார்த்தைகளை கவனமாக பேசுங்க. பிரச்சினைகள் எதையும் நிதானமாக கையாளுங்கள்.

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புதிய உறவுகள் ஏற்படும். கல்யாண பேச்சுவார்த்தை நடைபெறும் போது உங்க வார்த்தைகள்தான் சிக்கலை ஏற்படுத்தும்.

8ல் சனியின் பார்வையும் உள்ளதால் உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிரச்சனைகள் அதிகம் ஆனால் பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு, வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில், எதிர்பார்த்த பதவியில், வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை. என்றாலும், உங்களுக்கு அமையும் வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டிய காலம் இது.

உங்களின் திறமைக்கு ஏற்ற வேலை கிடைப்பது சிறிது கஷ்டம் தான். ஆகவே கிடைத்த வேலையை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வரும் காலங்களில் உங்கள் தகுதிகள் நிரூபிக்கப்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள்.

குடும்ப தலைவிகளுக்கு நிறைய சவால்கள் வந்தாலும் அதை சமாளிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் நிறைய சண்டைகள் ஏற்படும். விட்டுக்கொடுத்து போங்க. கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் மட்டுமே உங்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யாதீர்கள் பிரச்சினையில் கொண்டுபோய் விட்டு விடும்.

உங்க ராசியில் இருக்கிற ராகு, அஷ்டமத்து சனி அஷ்டமத்து குரு ஆட்டி படைக்கும். ஆவணி மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கு செல்கிறார். கேது ஆறாம் வீட்டிற்கு வருகிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

இல்லாவிட்டால் சிக்கல்தான். மொத்தத்தில் இந்த ஆண்டு வருமானத்தை விட செலவுதான் அதிகம் இருக்கும் என்பதால் சிக்கனமாக செலவு பண்ணுங்க. கொஞ்சமாவது சேமியுங்கள் கஷ்டங்கள் குறையும். நெருக்கடிகள் தீரும் வருமானம் அதிகமாகும்.

இந்த ஆண்டு என்ன பலன்கள் இப்படி இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். இது பொதுவான பலன்தான். உங்க சொந்த ஜாதகத்தில் தசாபுத்தி பலன்கள் சரியாக இருந்தால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும்.

பாதிப்பு என்று ஒன்று இருந்தால் பரிகாரம் என்று ஒரு இருக்கும்தானே. இந்த ஆண்டில் நீங்கள் பாதிப்புகள் நீங்க குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க.

குலதெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனையும், திருப்பதி ஏழுமலையானையும் வழிபடுவதன் மூலம் நன்மை அடையலாம். துர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கு ஏற்றுவதன் மூலம் உங்கள் சங்கடங்கள் நீங்கும்.
Previous Post Next Post