தல அஜித் செய்த பெரிய உதவி! பலருக்கும் தெரியாததை வெளியே சொன்ன நடிகர்

அஜித் சினிமாவில் உச்ச நட்சத்திர அந்தஸ்த்தில் இருப்பவர். அவர் தன் வாழ்வில் பல தடைகளை தாண்டி இந்தளவிற்கு உயர்ந்து நிற்கிறார். சந்தித்த சோதனைகள் ஏராளம்.

அதே வேளையில் அவர் தனக்கான கொள்கையில் சற்றும் தளாராமல் அனைவரிடம் அன்பும், பணிவும், நட்பும் கொண்டு வருகிறார். அதே வேளையில் அவர் வெளியே தெரியாமல் பலருக்கு உதவிகள் செய்து வருகிறார்.. யாராவது அது குறித்து வெளியே சொன்னால் தான் விசயம் தெரிய வருகிறது.

இந்நிலையில் நடிகர் அருண் குமார் ராஜன் தன்னுடைய வகுப்பு தோழி 6 ம் வகுப்பு படிக்கும் போது அவரின் அப்பா இறந்து விட்டார், என் தோழி பொறியியல் முடித்து நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகி திருமணம் ஆகும் வரை அவரின் படிப்பு செலவு எல்லாவற்றை அஜித் சார் தான் செய்து கொடுத்தார் என கூறியுள்ளார்.
Previous Post Next Post