சார்வரி தமிழ் வருடத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான்! மகரம் ராசிக்கு காத்திருக்கும் ராஜயோகம்

சார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சார்வரி வருடம் பிறக்கும் போது மூலம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை சனி புத்தியில் பிறக்கிறது.

புத்தாண்டு தொடங்கும் போது மகரம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சந்திரன், கேது, உங்க ராசிக்குள் குரு, சனி, செவ்வாய், மூன்றாம் வீட்டில் புதன் நான்காம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் ராகு என கிகரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

மகர ராசி
உங்க வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை தரப்போகிற ஆண்டாக சார்வரி தமிழ் புத்தாண்டு அமைந்துள்ளது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. உங்க ராசி அதிபதி சனி பகவான் இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கப்படி உங்க ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.
உங்களுக்கு ஜென்ம சனி காலம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பெரிய முதலீடுகள் வேண்டாம், இப்போது இருக்கிற சூழ்நிலையில் நீங்க எதையும் யோசிக்காம முடிவெடுக்காதீங்க.

சனி பகவான் உங்க ராசி அதிபதி என்பதால் அதிக அளவில் கெடு பலன்கள் எதுவும் ஏற்படாது தைரியமாக இருக்கலாம். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் கவனம், குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியிருக்கும் கவனம்.

பணம் விரையம்
குரு பகவான் வருட ஆரம்பத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் போது உங்களுக்கு பணவரவு இருந்தாலும் குரு பகவான் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு திரும்பி விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பணம் விரையம் ஏற்படும்.

நீங்க செய்யும் புதிய தொழில் முதலீடுகளை உங்க மனைவி பேரில் செய்வது லாபம் தரும். இந்த ஆண்டு உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். வேலையில் நெருக்கடிகள் இருந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள்.

பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது போல தோன்றினாலும் உங்களுக்கு பணவரவும் தாராளமாக இருக்கும் என்பதால் செலவுகளை சமாளிப்பீர்கள். கடன் சுமை குறையும்.

உங்க குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. ஆவணி மாதம் வரை விரைய ஸ்தானத்தில் இருக்கும் கேது பின்னர் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதே போல ஆறாம் வீட்டில் உள்ள ராகு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்தாலும் வேலைப்பளு அதிகரிக்கும். வதந்திகளை நம்பாதீங்க. எதையும் தீர விசாரித்து முடிவு பண்ணுங்க.

சுப காரியங்கள்
இந்த ஆண்டு உங்க குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, ஒன்பதாம் வீடுகளின் மீது விழுவதால் நிறைய நன்மைகள் நடைபெறும்.

திருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆண்டு இறுதியில் வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரும். உயர்கல்விக்காக மாணவர்கள் வெளியூர் பயணம் செல்வீர்கள் பிடித்த கல்லூரிகளில் உயர்கல்வி படிப்பீர்கள். இன்ஜினியரிங் படிக்க யோகம் கூடி வரும்.
Previous Post Next Post