யாழில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் நடத்தப்பட்ட கொவிட் 19 இற்கான பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

27 பேருக்கான கொவிட் - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் வருமாறுபோதனா வைத்தியசாலையில் 06 பேர்.அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் 5 பேர் கொழும்பு வாழைத்தோட்ட பகுதியிலிருந்து தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நேற்று மாலை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவர்கள்

அதேபோன்று வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் 04 பேர் பரிசோதிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டஒருவர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச்சேர்ந்த 08 பேர்

தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச்சேர்ந்த 08 பேர் இவர்களில் 4 பேர் பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையாக செய்யப்பட்டது.

இவ்வாறு 27 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் எவருக்கும் தொற்ற இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post