குரு வக்ர பெயர்ச்சி 2020: 4 மாதத்தில் இந்த 4 ராசிக்காரர்களையும் புரட்டிப்போடப்போகிறார்!

மகரம் ராசியில் சனியோடு சேர்ந்திருக்கும் குரு பகவான் படிப்படியாக விலகி வக்ரகதியில் சஞ்சரித்து தனுசு ராசிக்கு நகர்கிறார்.

தனுசு ராசிக்கு வக்ரமடைந்து திரும்பும் குரு 120 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரித்து செப்டம்பர் 13ஆம் தேதி நேர்கதியில் சஞ்சரிப்பார்.

இந்த 120 நாட்களும் குரு பகவானால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களில் யாருக்கு என்ன பலன் என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.வக்ர காலத்தில் பலன்கள்
குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் பொருளாதார கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும்.

ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

குரு பிறந்த போது உள்ள ஜாதகங்களை கணிக்கும் போது சில கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும்.

அந்த கிரகங்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும் போது பிறந்திருப்பார்கள். வக்ர சஞ்சார காலங்களில் குரு பகவான் தான் சஞ்சரிக்கும் ராசியின் பலனைக் கொடுக்காமல், அதற்கு அடுத்த ராசியின் பலன்களையே கொடுக்கும்.

120 நாட்களில் யாருக்கு சாதகம்
குருபகவான் தற்போது வக்ரகதியில் இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நன்மை அடைந்தவர்களுக்கு சில பாதிப்புகள் வரலாம்.

14-05-2020 முதல் வக்கிரம் பெற்று 29-06-2020 ஆம் தேதி வக்கிர கதி பெற்று தனுசு ராசிக்கு குரு வந்துவிடுகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி வரை குரு பகவான் வக்ரமாக தனுசு ராசியில் சஞ்சரிப்பார். வக்கிர கிரகங்கள் எதிர்மறையான பலன் தரும்.மேஷம்
குரு பகவான் இந்த வக்ர காலத்தில் உத்திராடம், பூராடம் ராசிகளில் சஞ்சரிப்பார். மேஷம் ராசிக்காரர்களுக்கு புது தெம்பும் உற்சாகமும் பிறக்கும்.

அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு சில நேரங்களில் தயக்கமும் தடுமாற்றமும் வரும். பிள்ளைகளின் படிப்பு விசயத்தில் கண்டிப்பாக இருங்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும்.

பங்குச்சந்தை முதலீடுகளில் நிலவரம் அறிந்து முதலீடு செய்யுங்க. வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும் சிலர் கடையை விரிவுபடுத்துவீர்கள். வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெருக்குவீர்கள்.

சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் அலைச்சலை குறைத்து உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. பரணி நட்சத்திரகாரர்கள் பொறுமையாக இருங்க நிதானமாக பேசுங்க. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும் கவனம்.ரிஷபம்
குரு பகவான் வக்ர காலத்தில் செல்லும் போது உங்களின் மனஇறுக்கங்கள் குறையும் அமைதி உண்டாகும். சிலருக்கு திருமணம் கைகூடி வரும் சிலருக்கு குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் உள்ளிட்ட தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும்.

குறைந்த வட்டிக்கு பணம் வாங்குவீர்கள். வேலையில் இருப்பவர்கள் கவனமாக வேலை செய்யுங்கள். இப்போது உள்ள சூழ்நிலையில் பதற்றமும் படபடப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே குருபகவான் வக்ர காலத்தில் கொஞ்சம் முன்னெச்சரிக்கை தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுக்காதீங்க. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள்.

உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் தடைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களை ஒத்திப்போடுங்கள்.

சிலருக்கு திடீர் பணவரவு வரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும். பணவரவு வரும் என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களை தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். விரும்பிய கல்லூரிகளில் உயர்கல்வி யோகம் தேடி வரும்.கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென நிறைவடையும், அரசு வழி காரியங்களில் அனுகூலம் கிடைக்கும்.

வீடு கட்ட வாஸ்து செய்வீர்கள், அரசு அப்ரூவல் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகள் இன்றி நிறைவேறும். உங்களின் பேச்சுக்கும் செயலுக்கும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

குரு தனுசு ராசியில் வக்ரகதியில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. பேச்சில் கவனமாக இருங்க. அவசரப்பட்டு பேசிவிட்டு அப்புறம் அவதிப்படாதீங்க. சிலருக்கு வீண் அலைச்சல்கள் வரலாம் கவனமாக இருங்க.
Previous Post Next Post