ஆட்டிப்படைக்கும் சனியே இந்த 3 ராசிக்கும் அள்ளி கொடுக்கும்! உச்சத்தில் இருக்கும் சூரியனால் ஆபத்தா? யாரையெல்லாம் வாட்டி வதைக்க போகிறாரோ?

மே மாதம் சூரியன் உச்சத்தில் இருக்கும் மாதம் அக்னி நட்சத்திர காலம் ஒரு பக்கம் அனல் பறக்க மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் முழுக்க வீட்டிற்குள் முடங்கியிருந்த மக்கள் மே மாதத்திலாவது வீட்டிற்குள் இருப்பவர்கள் வெளியே ஊர் சுற்ற முடியுமா என்று யோசிக்கிறீர்களா?

இந்த மாதம் யாருடைய வீட்டில் சுப பேச்சுவார்த்தை நடக்கும் யாருக்கு செலவு அதிகரிக்கும் என்பது குறித்து முழுமையாக ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக தெரிந்து கொள்ள 12 ராசிக்காரர்களும் இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்இந்த மாதம் உங்களுக்கு செலவு அதிகமாக இருக்கும். உங்களுடைய எதிரியும் நீங்கதான் நண்பரும் நீங்கதான். எதையும் யோசித்து முடிவு பண்ணுங்க. எடுத்தேன் கவிழ்தேன் என்று எதையும் செய்யாதீங்க. நெருப்பு ராசியில் நெருப்பு கிரகம் இருப்பதால் ரொம்ப வேகம் வேண்டாம் எதையும் விவேகமாக யோசிங்க. மாத பிற்பகுதியில் உங்களின் பேச்சுத்திறமை கூடும்.

அதிகார பதவிகள் தேடி வரும். அதே நேரத்தில் ரொம்ப கோபமாக பேசாதீங்க பிரச்சினைகள் தேடி வரும். இந்த மாதம் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களினால் நிறைய அற்புதங்கள் நடக்கும். நீங்க எதிர்பார்க்காமல் சில லாபங்கள் வரலாம். யோகங்கள் தேடி வரும். போட்டி பந்தையம் என அனைத்திலும் ஜெயிப்பீர்கள். பங்குச்சந்தைகளில் செய்யும் முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.

திடீர் என்று பணம் வரும் உங்களின் பேச்சுத்திறமை அதிகரிக்கும் உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காதலும் கல்யாணமும் இந்த மாதம் கை கூடி வரும். சொத்துக்கள் சேரும். வியாபாரிகருக்கு லாபம் வரும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் பெண்கள் எச்சரிக்கையாக இருங்க.

பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும் அரசு மூலம் யோகம் தேடி வரும். வங்கிக்கடன் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். உயரதிகாரிகளிடம் கவனமாக பேசுங்க. சம்பள பேச்சுவார்த்தைகளில் பிரச்சினைகள் வரலாம் கவனம். இந்த மாதம் யோகங்கள் நிறைந்த ரொம்ப நல்ல மாதமாக அமையப்போகிறது. இந்த மாதம் 08-05-2020 அதிகாலை 03.13 மணி முதல் 10.05.2020 காலை 05.02 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

இந்த மாதம் நெருப்பு உங்களுக்கு நன்மை செய்யும்.

நன்மை செய்யும் கிரகம் உங்க ராசிநாதன் செவ்வாய்

ரிஷபம்ரிஷபம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு ஊரடங்கு உத்தரவினால் மன உளைச்சலில் இருக்கும் உங்களுக்கு மன நிம்மதி ஏற்படும். வேலையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் நிரந்தரம் ஏற்படும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.

செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் எதுவும் வேண்டாம். புதிய வேலை கிடைக்கும். தொழிலில் மாற்றங்கள் வரலாம். எதையும் யோசித்து பண்ணுங்க. புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் அளவாக பேசவும்.

பணம் யாருக்கும் கடன் கொடுக்காதீங்க ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நல்ல வாழ்க்கை துணை அமைய வாய்ப்பு உள்ளது என்றாலும் கவனமாக இருங்க. திருமண பேச்சுவார்த்தை நடைபெறும். இந்த மாதம் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெண்கள் சமூக வலைத்தளங்களை அளவாக பயன்படுத்தவும். இந்த மாதம் மே 10ஆம் தேதி காலை 5.02 மணி முதல் மே 12ஆம் தேதி காலை 10.16 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. பயப்பட வேண்டாம் பயம் அகல ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

பஞ்சபூதங்களில் பூமி நன்மை செய்யும்.

நன்மை செய்யும் கிரகம் உங்க ராசிநாதன் சுக்கிரன்.

மிதுனம்மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. கொரோனா அச்சத்தின் பிடியில் சிக்கியிருந்தீர்கள் இந்த மாதத்தில் இருந்து உங்களுக்கு பயம் அகலும். அதே நேரத்தில் சூரியன் மாத பிற்பகுதியில் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருவது சிறப்பல்ல. வருமானத்திற்கு என்ன செய்வது என்று யோசிப்பீங்க. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது. மாத முற்பகுதியில் உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு அதிகரிக்கும்.

விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருங்க. எச்சரிக்கையாக இருங்க. நீங்க புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதளவில் சந்தோஷம் அதிகமாகும் தடைபட்டு வந்த சுப காரியங்கள் நல்ல முறையில் திடீர் அதிர்ஷ்டங்கள் வரலாம். திடீர் திருப்புமுனைகள் நிறைந்த மாதம். இந்த மாதம் 12ஆம் தேதி காலை 10 மணிமுதல் 14ஆம் தேதி இரவு 7.22 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. வீட்டை விட்டு வெளியே எதற்காகவும் போகாதீங்க.

பஞ்சபூதங்களில் காற்று நன்மை செய்யும்.

உங்க ராசிநாதன் புதன் சாதகமாக கிரகம்.

கடகம்சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, இந்த மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும். பண வருமானத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழில் நடத்துபவர்களுக்கு மே மாதம் பிரச்சினை இருக்கத்தான் செய்யும் இதுவும் கடந்து போகும் என்று எண்ணிக்கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு சரக்குகள் அனைத்தும் விற்று லாபம் வரும். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளுடன் பேசும் போது கவனமாக இருங்க. வீண் வம்பு வேண்டாம் அப்புறம் சம்பளத்தில கை வச்சிருவாங்க. சோஷியல் மீடியாவில் கவனமாக கருத்துக்களை பதிவிடுங்கள். தவறான கருத்துக்ளை பார்வேட் பண்ணாதீங்க. நிதி நிலைமையை பொறுத்தவரை நல்லா இருக்கும். இந்த மாதம் முழுக்கவே நீங்க வண்டி வாகனத்தில வெளியே போகாம இருப்பது நல்லது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்க நீங்க அனுமனை வழிபடுங்க. மே 14 இரவு 7.22 மணி முதல் மே 17 காலை 7.14 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க எந்த காரணத்திற்காவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

பஞ்சபூதங்களில் நன்மை தரக்கூடியது நீர்.

நன்மை தரும் கிரகம் உங்க ராசிநாதன் சந்திரன்

சிம்மம்சிம்மம் ராசிக்காரர்களே உங்க ராசி அதிபதி உச்சமாக இருப்பதால் பிரச்சினைகள் தீரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். சம்பளம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு பணம் வரும். எதிர்காலத்தை பற்றிய பயம் தீரும். அலுவலகம் சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.

சொந்த தொழிலில் இருந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் தீரும். சொத்துக்கள் மூலம் வருமானம் வரும் சகோதரர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். மனதில் இருந்த பல சங்கடங்கள் விலகி சந்தோஷங்கள் அதிகமாகும். புதிய வேலைகள் கிடைக்கும், சிலருக்கு புதிய பதவிகள் புரமோசன் தேடி வரும். இந்த மாதம் முழுவதும் வயதில் பெரியவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க.

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வியாபாரிகளுக்கு இது ரொம்ப நல்ல மாதம். மாத இறுதியில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனமாக இருங்க. மாணவர்களுக்கு பாதிப்புகள் விலகும். படிப்பில் ஆர்வம் காட்டுவீங்க. மே 17 காலை 7.14 மணி முதல் மே 19 இரவு 7.53 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். எந்த காரணத்திற்கும் நீங்க வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

பஞ்சபூதங்களில் நெருப்பு நன்மை செய்யும்

உங்க ராசிநாதன் சூரியன் நன்மை செய்யும் கிரகம்

கன்னிகன்னி ராசிக்காரர்களே மாத ஆரம்பத்தில் ரொம்பவே கவனமாக இருங்க. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் போக வேண்டாம். மாத பிற்பகுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவீர்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. சின்னச் சின்ன தொந்தரவுகள் வரலாம். கவனமாக இருங்க. மாத பிற்பகுதியில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும், நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மீடியா துறையிலும் திரைப்பட துறையில் இருப்பவர்களுக்கு இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்க உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். சுவாசக்கோளாறுகள் வரலாம், ரத்தத்தில் சில பிரச்சினைகள் வரலாம். கால்களில் எரிச்சல், வலி வரலாம். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். உணவு விசயத்தில் அக்கறை காட்டுங்கள். எந்த முடிவு எடுத்தாலும் யோசித்து எடுங்க வேலை விசயத்தில் கவனமாக இருங்க. அவசரப்பட்டு எந்த வேலையும் விட வேண்டாம். இப்போது இருக்கிற சூழ்நிலையில் வேலைக்காக நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும் கவனம். மே 19ஆம் தேதி இரவு 7.53 மணி முதல் மே 22ஆம் தேதி காலை 7.37 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க. வீட்டில் யார் கூடவும் கோபமாக பேசவேண்டாம். நிதானமாக இருங்க.

நன்மை செய்யும் பஞ்சபூதம் பூமி.

உங்களுக்கு உங்க ராசிநாதன் புதன் நன்மை செய்யும்.

துலாம்துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இருந்த பல தடைகள் விலகும், கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவருமானத்தில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் இருந்து சம்பள பாக்கி வரும்.

சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வர வாய்ப்பு உள்ளது. சுப காரியத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும் மனதில் ஏற்பட்டிருந்த கவலைகள் தீரும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் நிம்மதியாக இருக்கும். அதே நேரத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யாதீங்க.

இருப்பதை விற்று லாபம் அடையப்பாருங்க. வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கவலைகள் படிப்படியாக தீரும். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருங்க. இந்த மாதம் தடைகளுக்குப் பிறகு நிறைய நல்லது நடக்கும். மே 22ஆம் தேதி காலை 7.37 மணி முதல் மே 24 மாலை 5.34 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள்.

விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு சுகமான மாதமாக அமையப்போகிறது. உங்க மூத்த சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த மாதம் வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரப்போகிறது.

உங்க வியாபாரம் ரொம்ப நல்லா இருக்கும். வீடு கட்டணும்னு ரொம்ப நாளாக நினைச்சிட்டு இருக்கீங்க. இந்த மாதம் அதுக்கான ஏற்பாடுகளை பண்ணுங்க அதற்கான யோகம் வந்து விட்டது. பெண்கள், கர்ப்பிணிகள் கவனமாக இருங்க. வண்டி வாகனத்தில் எதற்காகவும் வெளியே போக வேண்டாம். மாத பிற்பகுதியில் வேலையில் சில சிக்கல்கள் வரலாம் கவனமாக இருங்க.

குடும்பத்தில் பிரச்சினைகள் தலை தூக்கும் விட்டுக்கொடுத்து போங்க. பேச்சில் கவனமாக இருங்க யார் கிட்டையும் கோபமாக பேசவேண்டாம். கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம். மே24ஆம் தேதி மாலை 5.34 மணி முதல் மே 27ஆம் தேதி காலை 1.24 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருங்க.

பஞ்ச பூதங்களில் தண்ணீர் உங்களுக்கு நன்மை செய்யும்.

நன்மை தரும் கிரகம் செவ்வாய் மற்றும் புளூட்டோ.

தனுசுதனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகுது. பண வருமானத்தில் ஏற்பட்டிருக்கும் தடைகள் நீங்கும். ஏழரை சனியில் பாத சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை இருக்கேன்னு ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீங்க. கவலைப்படாதீங்க காலம் மாறும். இந்த மாதம் கிரகங்களின் மாற்றம் மனதிலும் உடலிலும் மாற்றங்கள் ஏற்றங்களை கொடுக்கும். பெண்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க.

கால்களில் பிரச்சினைகள் வரைலாம் கவனமாக இருங்க. வியாபாரத்தில் லாபம் வரும் என்றாலும் இப்போது இருக்கிற பிரச்சினையில் கடன் வாங்கவும் அதை பிசினசில் முதலீடு செய்வது பற்றியும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.

படிப்பில நல்லா கவனம செலுத்துங்க. கிடைக்கிற வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கங்க. இந்த மாதம் உற்சாகம் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. மே 2ஆம் தேதி அதிகாலை 1.05 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது கவனமாக இருங்க. மே 27அதிகாலை 1.24 மணி முதல் மே 29 காலை 6.58 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. எந்த காரணத்திற்காவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வண்டி வாகனத்தில் வெளியே போனால் பிரச்சினை வரும் கவனமாக இருங்க.

பஞ்சபூதத்தில் நெருப்பு உங்களுக்கு சாதகமானது.

குரு உங்களுக்கு சாதகமான கிரகம்.

மகரம்மகரம் ராசிக்காரர்களே நீங்க இந்த மாதம் உங்களுக்கு நிறைய சோதனைகள் வரத்தான் செய்யும் கவனமாக இருங்க. உங்க தோல்வியில இருந்து நீங்க பாடம் படிப்பீங்க. பல சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீங்க. எந்த நோயிலும் இருந்தும் நீங்க மீண்டு வருவீங்க.

நிறைய சக்திகள் அதிகரிக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சில பாதிப்புகள் வரலாம் கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பலர் வீட்டில் இருந்தே வேலை செய்து வருவதால் வேலையில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் பிரச்சினைகளை சமாளித்து லாபம் சம்பாதிப்பீர்கள். ஜென்ம சனி இருப்பதால் தலைவலி பிரச்சினைகள் வரலாம்.

பேச்சில் கவனமாக இருங்க கோபத்தை கட்டுப்படுத்துங்க. யாரைப்பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். மே 29காலை 6.58 மணி முதல் மே 31காலை 10.19 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்காதீங்க.

பஞ்சபூதங்களில் பூமி சாதகமானது.

சாதகமான கிரகம் உங்க ராசிநாதன் சனி.

கும்பம்கும்பம் ராசிக்காரர்களே நீங்க இந்த மாதம் உங்க ராசிக்கு நல்ல மாதம் ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். கணவன் மனைவி பிரச்சினைகள் தீரும். வீட்டில் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து இருப்பதால் நீங்க சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள்.

உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வியாபாரம், தொழில் துறையில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். உங்களின் பொருளாதார நிலை சீரடையும். மின்சாதனங்களை உபயோகிக்கும் போது கவனமாக இருங்க. நெருப்பில் கவனம் இல்லாவிட்டால் காயங்கள் ஏற்படலாம். வயதானவர்களும் வீட்டிற்குள் பத்திரமாக இருங்க. லாக் டவுன் விடுமுறை காலத்தை நல்லா பயன்படுத்திக்கங்க.

உங்க பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கவனமாக இருங்க இந்த கால கட்டத்தில் அவர்கள் மீது தனி கவனம் அவசியம். உங்களுடைய வீட்டில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் உற்சாகமான மாதமாக அமையப்போகிறது. இது நம்பிக்கையோடு இருக்கீங்க நல்லதே நடக்கும். பஞ்சபூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும்.

சாதகமான கிரகம் சனி. உங்க ராசிநாதன் சனி நன்மை செய்யும்.

யுரேனஸ் ஒத்துழைப்பு கொடுக்கும்.

மீனம்மீனம் ராசிக்காரர்களே உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் தைரியமாக புதிய முதலீடுகள் செய்யலாம். சில நேரங்களில் பணம் வருவது போல இருந்தாலும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலகும். பொருளாதாரம் தடை பற்றிய கவலைகள் வேண்டாம் விரைவில் நீங்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க உடற்பயிற்சி பண்ணுங்க.

நோய் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ சிகிச்சையில் கவனமாக இருங்க. வேலையில் பிரச்சினையா இருக்கே என்று கவலைப்படாதீங்க. பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

வீட்டில் உங்க மதிப்பு மரியாதை கூடும். வீட்டில் நிறைய வேலை இருந்தாலும் உற்சாகமாக செய்வீர்கள். உங்களுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கும். இந்த மாதம் ரொம்ப உற்சாகமும் சுறுசுறுப்பும் நிறைந்த மாதமாக அமையப்போகிறது.

பஞ்சபூதங்களில் நீர் நன்மை செய்யும்.

நன்மை செய்யும் கிரகம் குரு , நெப்டியூன்.
Previous Post Next Post