சூரியன் உச்சம் பெற்ற ராசிகள்!... அதிர்ஷ்டங்கள் தேடி வருமாம்- இந்த வாரத்திற்கான ராசி பலன்கள்

இந்த வாரம் மேஷம் ராசியில் சூரியன், புதன், ரிஷபம் ராசியில் சுக்கிரன், மிதுனம் ராசியில் ராகு தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் சனி, குரு, கும்பம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சந்திரன் இந்த வாரம் விருச்சிகம், தனுசு,மகரம் ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

இந்த வாரம் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும்.மேஷம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. உங்க ராசியில் சூரியன் உச்சம் பெற்றுள்ளார் கூடவே புதன் சஞ்சரிக்கிறார்.

2ஆம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருக்கிறார். மூன்றாம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் குரு, சனி, சஞ்சரிக்கின்றனர். லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் சின்னச் சின்ன அலைச்சல்கள் சோர்வுகள் வரலாம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரச்சினைகள் ஏற்படும் கவனம். புதிய வீட்டு மனைகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணம் யாருக்கும் கடன் தர வேண்டாம்.

ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடனாக வாங்கி தராதீங்க. ஆடம்பர செலவுகள் செய்யாதீங்க பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க. வியாபாரிகளுக்கு லாபமும் உயர்வும் அதிகமாகும்.

செவ்வாய்கிழமையன்று துர்க்கைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும்.ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன், உங்க ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சனி, குரு பத்தாம் வீட்டில் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

இந்த வாரம் உங்க குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும் விரைய செலவுகளை செய்யாதீங்க. பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வியாபாரிகளுக்க லாபம் கிடைக்கும். அரசுப்பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். வங்கிக்கடன் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சிலருக்கு மனக்குழப்பம் வரும்.

மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபடுங்கள்.மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசியில் ராகு, களத்திர ஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சனி, குரு, பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சூரியன்,புதன்,விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சந்திரன் சஞ்சாரம் வார இறுதியில் சாதகமாக இல்லை. மே 12ஆம் தேதி காலை 10 மணிமுதல் 14ஆம் தேதி இரவு 7.22 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க.

உங்க செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்க அப்புறம் பாருங்க அன்பும் காதலும் அதிகரிக்கும்.

வேலைப்பளு அதிகரிக்கும் கவனமாக இருங்க. வியாபாரிகள் தொழிலதிபர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருங்க. பண விவகாரங்களில் கவனமாக இருங்க. புதிய சொத்து, வீடு நிலம் வாங்க இது சரியான நேரமில்லை பொறுத்திருங்க. சுய தொழில் செய்பவர்கள் வங்கிக்கடனுக்கு முயற்சி செய்யலாம் எளிதில் கிடைக்கும்.

பெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை நினைத்து வழிபடுங்கள். பாதிப்பு நீங்கி நல்லதே நடக்கும்.கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் சூரியன்,புதன், லாப வீட்டில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் ராகு, எட்டாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் சனி, குரு, ஆறாம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

உங்க வீட்டில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் வசதி வாய்ப்பு கூடும். வேலைக்கு போகும் பெண்களுக்கு புரமோசன் கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.

உங்களுடைய சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பித்தம் தொடர்பான நோய்களும் மயக்கமும் வரலாம். ஐடி வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும்.

செய்யும் வேலையில் நிதானமும் பொறுமையும் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. பெண்கள் விசயத்தில் கவனமாக இருங்க இல்லாவிட்டால் அவப்பெயரில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.

வண்டி வாகனத்தில் வெளியே செல்லும் போது கவனமாக இருங்க. நெருப்பு, மின்சாதனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபாடு செய்யுங்கள். பிரச்சினைகள் தீரும்.சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, ஒன்பதாம் வீட்டில் சூரியன்,புதன், பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் ராகு, ஏழாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சனி, குரு, ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது, பணப்பிரச்சினை தீரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பொருளாதார நிலை அதிகரிக்கும். உங்க நிதி நிலைமை தேடி வரும். மகிழ்ச்சியும் செல்வமும் அதிகரிக்கும்.

பிள்ளைகளால் பெருமை தேடி வரும். அலுவலகத்தில் பொறுப்புகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். எந்த பொறுப்பையும் தட்டிக்கழிக்காதீங்க யாரை நம்பியும் ஒப்படைக்காதீங்க. உங்க உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவர்கள் மேற்படிப்பு தொடர்பான தேர்வுகளில் கவனமாக இருங்க. தொழிலதிபர்கள் பொறுமையோடும் நிதானத்தோடும் இருங்க. தடைகள் நீங்கும் வங்கிக்கடன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். சனிக்கிழமைளில் அனுமனை நினைத்து வணங்குங்கள் நல்லதே நடக்கும்.கன்னி
புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன், புதன், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் ராகு ஆறாம் வீட்டில் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் சனி, குரு, நான்காம் வீட்டில் கேது இணைந்திருக்கிறார்கள்.

உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். செய்யும் வேலையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். உயரதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். இதுநாள்வரைக்கும் இருந்த அலைச்சல் நீங்கும்.

அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். வயிறு பிரச்சினைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஐடி துறையில் வேலை செய்பவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன் ஏழாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார் கூடவே புதன் இணைந்துள்ளார்.

ஐந்தாம் வீட்டில் செவ்வாய், நான்காம் வீட்டில் சனி, குரு முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் உங்களின் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

சகோதர சகோதரிகளிடையே ஏற்பட்டு சண்டை சச்சரவு மறையும். வியாபார ரீதியான பயணங்கள் வரலாம் கவனத்தோடு இருங்க. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. நண்பர்களுடனான தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் பிரச்சினைகள் தேடி வராது.விருச்சிகம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இந்த வாரம் சூரியன், புதன் ஆறாம் வீட்டிலும் செவ்வாய் நான்காம் வீட்டிலும்,சனி,குரு மூன்றாம் வீட்டிலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர்.

சுக்கிரன் ஏழாம் வீட்டிலும் எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். உங்க மனதில் துணிச்சல் அதிகரிக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். எதிரிகள் மூலம் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும்.

தெய்வ பலம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வேலை விசயமாக வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். பெண்களுக்கு கணவரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.

உங்களின் ஆரோக்கியம் மேம்படும். புதிய பதவிகள் தேடி வரலாம். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பங்கு வர்த்தக முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். சனிக்கிழமை நாளில் சனிபகவானை வணங்குங்கள். ஞாயிறு ராகு காலத்தில் கால பைரவரை வணங்குங்கள்.தனுசு
குருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இந்த வாரம் சூரியன், புதன் ஐந்தாம் வீட்டிலும் ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு, மூன்றாம் வீட்டில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் சனி, குரு உங்க ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர்.

இந்த வாரம் உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்களால் பிரச்சினைகள் வராமல் தவிர்க்க வீண் பேச்சுக்களை பேச வேண்டாம்.

ஐடி துறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்டு வந்த சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.

உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வியாபாரிகளுக்கு முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். தொழில் துறையினர் பொறுமையாக இருங்க. பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். சனிக்கிழமை ஆஞ்சநேயர் படத்திற்கு துளசி மாலை போட்டு வணங்கவும்.

இப்போதய சூழ்நிலையில் எந்த கோவிலுக்கும் போக முடியாது என்பதால் வீட்டிலேயே குல தெய்வத்தை வணங்குங்கள்.மகரம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்க ராசியில் சனி, குரு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், உங்களுக்கு விரைய ஸ்தானத்தில் கேது, நான்காம் வீட்டில் சூரியன், புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் உங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க ஒற்றுமை அதிகரிக்கும்.

பெண்களின் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். தடைபட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடியும். உங்க உடல் நலம் சீராக இருக்கும்.

வேலை செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருந்தே வேலை செய்பவர்களுக்கு திடீர் இடமாற்றம் கிடைக்கும்.

வேலையில் அக்கறையோடு இருங்க. பேச்சில் காரத்தை குறைங்க கோபமாக பேச வேண்டாம். சனிக்கிழமை லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்குள் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சூரியன், புதன், நான்காம் வீட்டில் சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் சனி, குரு லாப ஸ்தானத்தில் கேது, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த வாரம் உங்க ராசிக்கு பணவரவு அதிகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உங்க பேச்சில் கவனமாக இருங்க கோபாமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

மனதிலும் உடலிலும் உற்சாகம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். புதிய பதவிகள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு கடையை விரிவுபடுத்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் தவிர்க்கவும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு ஆன்லைனில் படிப்பது நல்லது.மீனம்
மீனம் ராசிக்காரர்களே இந்த வாரம் விரைய ஸ்தானத்தில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் சூரியன்,புதன் சஞ்சரிக்கிறார்கள், மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் சனி, குரு சஞ்சரிக்கின்றனர்.

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேது, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

நிதி நிலைமை இந்த வாரம் நன்றாக இருக்கும். பணம், விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்திருங்க களவு போக வாய்ப்பு இருக்கு. பங்குச்சந்தை, கமிஷன் மூலம் பணவரவு தாராளமாக இருக்கும்.

தனியார் துறை, ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கட் ஆகும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. வேலையில் கவனமாக இருங்க. பெண்கள் விசயத்தில் கவனமாக இருங்க.

இல்லாவிட்டால் அவமானங்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு மறைமுக தொல்லை நீங்கும் எதிரிகளின் போட்டி விலகும். வீட்டில் உறவினர்களிடம் கவனமாக பேசுங்க. கருத்து வேறுபாடுகள் மூலம் பிரச்சினைகள் வரலாம் கவனம்.
Previous Post Next Post