குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, நீங்கள் செய்யும் இந்த பாவச்செயல் கூட ஒரு காரணம்தான்!

புத்திரபாக்கியம் இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய சோகம் என்பதை, குழந்தை வரம் கிடைக்கப்பெறாத தம்பதியை கேட்டால் மட்டுமே, அந்த சோகம் புரியும். குழந்தை உள்ளவர்களுக்கு அந்த குழந்தையின் அருமை பெருமைகள் தெரிவதே இல்லை.

சில பேர் தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளை தெய்வமாக நினைத்து வளர்த்து வருகிறார்கள். ஆனால் சில பேர் குழந்தைகளை தகாத வார்த்தைகளைக் கூறி, திட்டி வளர்ப்பவர்களும் உள்ளார்கள் என்று சொன்னால் அது பொய்யாகாது. உங்கள் குழந்தைகளை என்றைக்குமே பாரமாக நினைக்காதீர்கள்.

அவர்கள் தான் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற வரம். சரி. குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வேத சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கிய காரணம் என்ன என்பதைப் பற்றியும், குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆன்மீகரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.குழந்தை வரம் இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். தீபாவளி முடிந்ததும் வரக்கூடிய பெரிய சஷ்டி விரதம் என்பது வருடத்திற்கு ஒரு முறை தான் வரும். ஆனால் மாதம்தோறும் வரும் சஷ்டி தினத்திலும் குழந்தை இல்லாதவர்கள் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பதும் உண்மையான ஒன்று. மாதம்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று முருகப் பெருமானை வேண்டி எப்படி விரதம் இருப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த விரதத்தை முதன்முதலாக தொடங்கும்போது வளர்பிறை சஷ்டி திதியில் தொடங்க வேண்டும். உங்கள் நாள்காட்டியில் பார்த்தாலே தெரியும். மாத சஷ்டி என்றைக்கு வருகிறது என்று! இந்த விரதத்தை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இருந்தால் பலன் மேலோங்கும். கணவன் விரதம் இருக்க முடியவில்லை என்றால் மனைவி மட்டும், இந்த விரதத்தை மேற் கொள்ளாம். உங்கள் வீட்டில் முருகப்பெருமானுடைய படம் கட்டாயம் இருக்க வேண்டும். அதுவும் வள்ளி தெய்வானையுடன், முருகன் மயில் வாகனத்தில் இருப்பது மேலும் சிறப்பு. முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற அரளிப்பூவை கட்டாயம் சாத்த வேண்டும்.ஒரு டம்ளர் பால், வாழைப்பழம், கற்கண்டு இவைகளை முருகருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதோடு சேர்த்து குழந்தைகளுக்கு பாலூட்டும் சங்கு என்று சொல்வார்கள் அல்லவா? சிலபேர் பாலாடை என்று சொல்வார்கள். அதில் உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது 6, 11, உங்கள் வசதியை பொருத்தது. இந்த சங்கடைகளையும் பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அந்த சங்கில் பாலை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பு நெய்வேதியம், சங்கடை, ஒரு தீபம், இவைகள் அனைத்தையும் தயாராக வைத்து விட்டு கணவன் மனைவி இருவரும் முருகப் பெருமானை மனதார நினைத்து இந்தப் பதிகத்தை படிக்க வேண்டும். அருணகிரி சுவாமிகள் அருளிய திருப்புகழ் உங்களுக்காக இதோ!செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப …… முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த …… பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி …… லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி …… தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க …… வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த …… குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் …… முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த …… பெருமாளே.

விளக்கம்:செகமாயை யுற்று … இந்த உலக மாயையில் சிக்குண்டு,

என் அகவாழ்வில் வைத்த … எனது இல்லற வாழ்வில் எனக்குக்
கிட்டிய

திருமாது கெர்ப்பம் உடல் ஊறி … அழகிய மனைவியின் கருவில்
உருவாகி அவளது உடலில் ஊறி

தெசமாத முற்றி … பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து,

வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த … நல்ல வடிவோடு கூடி
பூமியில் நன்கு தோன்றிய

பொருளாகி … குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து,

மக அவாவின் … குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை

உச்சி விழி ஆநநத்தில் … உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து,
முகத்தோடு முகம் சேர்த்து,

மலைநேர்புயத்தில் உறவாடி … எனது மலை போன்ற தோள்களில்
நீ தழுவி உறவாடி,

மடிமீதடுத்து விளையாடி … என் மடித்தலத்தில் அமர்ந்து
குழந்தையாக விளையாடி,

நித்த மணிவாயின் முத்தி தரவேணும் … நாள்தோறும் உன் மணி
வாயினால் முத்தம் தந்தருள வேண்டும்.

முகமாய மிட்ட குறமாதி னுக்கு … முக வசீகரம் மிக்க குறப்பெண்
வள்ளியின்

முலைமேல் அணைக்க வருநீதா … மார்பினை அணைக்க வந்த
நீதிபதியே,

முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் … பழம் பெரும்
வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே

மொழியேயு ரைத்த குருநாதா … பிரணவப் பொருளை சிவனாருக்கு
உபதேசித்த குருநாதனே,

தகையாது எனக்கு … தடையொன்றும் இல்லாது எனக்கு

உன் அடிகாண வைத்த … உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த

தனியேரகத்தின் முருகோனே … ஒப்பற்ற திருவேரகத்தின்
(சுவாமிமலையின்) முருகனே,

தருகாவிரிக்கு வடபாரிசத்தில் … மரங்கள் இருபுறமும் நிறைந்த
காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே

சமர்வேலெடுத்த பெருமாளே. … போர் வேல் விளங்க நிற்கும்
பெருமாளே.இந்தப் பாடலை படித்து முடித்துவிட்டு, பூஜை முடிந்தவுடன் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்திருக்கும் சங்குடன் சேர்ந்த பாலை, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கை குழந்தைகளுக்கு தானமாக கொடுக்க வேண்டும். அதாவது அந்த குழந்தையின் பெற்றோரிடம், ‘உங்களின் குழந்தை இல்லாத கஷ்டத்தை சொல்லி, சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த பரிகாரத்தை செய்கிறோம் என்று சொல்லியே தானமாகக் கொடுக்கலாம்.’ கந்தசஷ்டி விரதத்தை உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் வரை தொடர்ந்து செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. சங்கடை கலந்த பாலை ஒவ்வொரு சஷ்டிக்கும் தானமாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒரு சஷ்டி தினத்தில் மட்டும் தானம் செய்தால் போதும். இறைவனுக்கு நைவேதியமாக படைத்த பிரசாதம், பால் பழங்களை உங்கள் வீட்டு அருகில் இருக்கும் பெரியவயது குழந்தைகளுக்குக்கூட தானமாக கொடுக்கலாம்.

இறுதியாக என்ன பாவம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். சிலரது ஜாதகத்தை வைத்தே அவர்களின் குடும்ப ஜோசியர் சொல்லி விடுவார். ‘உங்களுக்கு கட்டாயம் குழந்தை பாக்கியம் இல்லை என்று.’ அந்த நபரின் ஜாதக கட்டம் குழந்தை பாக்கியம் இல்லாததாக அமைந்திருக்க, பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமும் ஒரு காரணமாக இருக்கும். அதாவது போன ஜென்மத்தில் கருக்கலைப்பு செய்தவர்கள், கருக்கலைப்பு செய்ய துணை போனவர்கள், கருக்கலைப்பு செய்வதற்காக உதவியாக இருந்தவர்கள் இப்படி கருச்சிதைவிற்கு எந்த வகையில் காரணமாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் குழந்தைப்பேறு இருக்காது.இந்த ஜென்மத்தில் கருக்கலைப்பு செய்பவர்களுக்கு, கருக்கலைப்புக்கு துணை போகுபவர்களுக்கு, கண்டிப்பாக அடுத்த ஜென்மத்தில் குழந்தை பாக்கியம் இறுக்காது என்று சொல்கிறது சாஸ்திரமும் ஜோதிடமும். பிரம்மஹத்தி தோஷத்தை விட கருக்கலைப்பு தோஷம் மிக ஆபத்தானது என்ற ஒரு கூற்றும் உள்ளது. ஆகவே, இந்த பாவத்தை தயவு செய்து இனி அறிந்தும் அறியாமலும் கூட யாரும் செய்துவிட கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே

எடுத்த காரியத்தில் வெற்றி தரும் அனுமன் காயத்ரி மந்திரம்

இந்த விரதத்தை தொடர்ந்து 62 வெள்ளிக்கிழமைகள் செய்தால் செல்வம் பெருகுமாம்..!
Previous Post Next Post