ஸ்ரீலங்காவில் பெய்த மீன் மழை! அதிசயத்தில் மக்கள்

ஸ்ரீலங்காவில் மஹியங்கனை பகுதியில் நேற்று மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பெய்த மழை நீருடன் மீன்களும் விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்குள்ள வீடு ஒன்றின் தொட்டிக்குள்ளும் மீன்கள் காணப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவில் மீன் மழை என்பது அரிதான விடயமாகும். கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் பல பகுதிகளில் நடைபெற்றிருந்தன.மீன் மட்டுமல்லாது இரால் மழையும் ஸ்ரீலங்காவில் பெய்துள்ளது. இந்த சம்பவத்தால் குறித்த பகுதியிலுள்ள மக்கள் வியப்பில் உள்ளனர்.

இது தொடர்பில் விஞ்ஞானிகள் கூறுகையில்,

“காற்று சுழன்று அடிக்கும்போது குளங்களில் உள்ள மீன்கள் மட்டுமல்ல சில நேரங்களில் தவளையும் கூட அதனால் கவர்ந்து வரப்படும். மேக கூட்டங்களில் சிக்கி சில நேரங்களில் நீண்ட தூரத்துக்கு அவை பயணித்து மழை பெய்யும் இடங்களில் விழும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
Previous Post Next Post