பேருந்துகளில் நின்ற நிலையில் சென்றால் ஆ பத்து - பொது மக்களுக்கு எச் சரி க்கை

பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும் போது கொரோனா வை ரஸ் தொற்று எவ்வாறு பரவும் என்பது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரினால் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பேருந்துகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை திறந்து வைத்தால் பேருந்துக்குள் வரும் காற்றினால் அதிக கொரோனா ஆபத்து பின் பக்க ஆசனங்களில் உள்ளவர்களுக்கே ஏற்படும். அத்துடன் பின்பகுதிக்கு செல்லும் காற்றும் மீண்டும் சுற்றி பேருந்தின் முன் பகுதிக்கு வரும்.

எனவே ஒரு கொரோனா தொற்று நோயாளி பேருந்தில் இருந்தால் அவர் தும்மும் போது பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் பேருந்தில் நின்றுக் கொண்டு சென்றால் வைரஸ் தொற்றுக்குள்ளாகும் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் ஆபத்துக்குள் உள்ளது.

பேருந்துககளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்து சென்றால் அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்திருந்தல் வேண்டும். அத்துடன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post