இந்த 6 ராசிக்காரர்கள் என்னென்ன குணங்கள் உடையவராக இருப்பார்கள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும். தனக்கு கணவனாக வரப்போகிறவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் வரமாக கருதுவார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை தனக்கு மனைவியாக வரப்போகிறவள் அழகாக இருக்க வேண்டும் என்பது அவர்களது கனவாக இருக்கும்.

ஆனால் பெண்களைப் பொருத்தவரை தனக்கு கணவனாக வரப்போகிறவர் அழகாக இருக்க வேண்டும் என்பதை முக்கியமாக கருதுவதில்லை. நல்ல குணம் உடையவராகவும், அன்பானவராகவும் இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் முதல் விருப்பமாக இருக்கும்.

அப்படி இந்த 6 ராசிக்காரர்கள் என்னென்ன குணங்கள் உடையவராக இருப்பார்கள் என்பதை பற்றி பார்ப்போம்..

மேஷம்
மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் எதார்த்தமானவர்கள்.

இவர்கள் எதையும் அதிகம் மனதில் போட்டு குழப்பிக் கொள்வதில்லை. தெளிவான சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்களாக திகழ்கிறார்கள்.

இவர்கள் தங்கள் வாழ்க்கை துணையையும் மிகச் சரியாக புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து கொள்வார்கள். பெண்களுக்கு சிறிய விஷயங்களுக்குக் கூட அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆணை மிகவும் பிடிக்கும். அவ்வரிசையில் மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் சிறந்த தேர்வாக நிச்சயம் இருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் நல்ல கணவராக இருப்பதற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்களின் குண நலன் பெண்களின் கருத்துகளுக்கு ஏற்றார்போல் இருக்கும்.

ரிஷப ராசியில் பிறந்த ஆண்கள் குடும்பத்தை கோவிலாக மதிப்பவர்களாக இருப்பார்கள். குடும்பத்திற்காக எதையும் தியாகம் செய்யும் பண்பு இவர்களிடம் நிறைந்திருக்கும். இவர்கள் தங்கள் மனைவிக்காக எந்த உதவியும் செய்ய தயங்குவதில்லை. இதனால் இவர்கள் ஒரு பெண்ணுக்கு சிறந்த கணவராக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

கடக ராசியில் பிறந்த ஆண்கள் தங்களின் குடும்ப வாழ்க்கையை மிகவும் விரும்புபவர்களாக இருப்பார்கள். தங்களின் வாழ்க்கைத் துணைக்கு உரிய மரியாதையை எப்போதும் கொடுப்பார்கள்.

அதேபோல் தனக்கு துணையாக வருபவர் எப்போதும் தன்னை மரியாதையாகவும், கெளரவமாகவும் நடத்த வேண்டும் என்பதை முக்கியமாக நினைப்பார்கள்.

தங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ்க்கை துணை அமைந்துவிட்டால் அவர்கள் தங்கள் சுயத்தை இழந்து தன் மனைவிக்காக எதையும் செய்யத் தயங்குவதில்லை என்றே கூறலாம். இதனால் அவர்கள் ஒரு மிகச் சிறந்த கணவராக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் எப்போதும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வசீகரத்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள். தங்களை சுற்றி இருக்கும் சூழ்நிலை எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு எப்போதும் கலகலப்புடன், சுறுசுறுப்புடன் இருக்கும் பெண்கள் வாழ்க்கை துணையாக அமைந்து விட்டால் போதும்! இவர்களது வாழ்க்கை மிகவும் ஒளிமயமாக இருக்கும்.

இவர்கள் தங்கள் துணையை மனைவியாக பார்க்காமல் தோழியாக பார்க்கக் கூடியவர்கள். ஆதலால் இவர்கள் ஒரு பெண்ணுக்கு சிறந்த கணவராக இருப்பதற்கு தகுதி உடையவராக இருப்பார்கள்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் காதலையும், திருமணத்தையும் மதிப்பவர்களாக இருப்பார்கள். தங்களின் வாழ்க்கை துணையை தனக்கு இணையாக நினைக்கக் கூடியவர்கள் இவர்கள்.

எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய வாழ்க்கைத்துணையை விட்டுக் கொடுக்க விரும்பாத மிகச்சிறந்த கணவராக இருப்பார்கள். இவர்களின் இளமை பருவம் முழுவதும் இவர்கள் தங்களுக்கு சரியான துணையை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருந்திருப்பார்கள்.

இவர்களிடம் அதிகம் பொறுமையும், மற்றவர்களைப் பாராட்டும் குணமும் நிறைந்திருக்கும் இதனால் இவர்கள் ஒரு பெண்ணுக்கு சிறந்த கணவராக நிச்சயம் இருப்பார்கள்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்த ஆண்கள் மிகச்சிறந்த கணவராக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. கன்னி ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

ஒரு பெண் ஒரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பது தன்னுடைய கணவன் தன் குடும்பத்தை முன்னிறுத்தி நடத்தி செல்ல வேண்டும் என்பதுதான். தன்னை விட தன் கணவன் அறிவாளியாக இருப்பதில் பெண்ணுக்குப் பெருமை தானே!

தங்கள் உழைப்பினால் எப்படியும் தன் குடும்பத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் கன்னி ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இருப்பதில் சந்தேகம் இல்லை.

இவர்களிடம் முன்கோபம் மற்றும் ஈகோ போன்றவை இருப்பதில்லை. கன்னி ராசியில் பிறந்த ஆண்களுக்கு தங்கள் குணத்திற்கு ஏற்ப வாழ்க்கைத்துணை அமைந்துவிட்டால் இவர்களை விட சிறந்த தம்பதியர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.

இந்த ராசியில் பிறந்த ஆண்கள் மட்டுமல்ல. எல்லா ராசிக்காரர்களும் தங்கள் மனைவியை தோழியாக பார்த்தால் சிறந்த கணவராக இருக்க முடியும்.

இது ஒரு பொது பலன் தான். அதற்காக மற்ற ராசிக்காரர்கள் சிறந்த கணவராக இல்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் அவர்களைவிட இந்த ராசிக்காரர்கள் ஒரு பெண்ணை புரிந்து கொள்வதில் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்பது ஜோதிட நம்பிக்கை.
Previous Post Next Post