கோணேஸ்வர் ஆலயத்திற்கு புதிய ஆபத்து! பேரதிர்ச்சியில் தமிழர்கள்

திருகோணமலையில் அமைந்துள்ள பாடல் பெற்ற சிவ தலமான கோணேஸ்வரம் ஆலயம் என்பது கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறது.

இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்ட மாட்டோம்.ஆனால், அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்குரிய தொல்பொருள்கள் இருந்தால் அவை பாதுகாக்கப்பட வேண்டும்என ஜனாதிபதி கோட்டாபாயவால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இராவணன் என்ற மன்னன் இலங்கையை ஆண்டான் என்பது கட்டுக்கதை என சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட இதே தேரர், தற்போது இந்துக்களின் புனித தலமான கோணேஸ்வரம் கோகண்ண விகாரை என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்த 2000 இடங்கள் உள்ளன.இவை தேசிய மரபுரிமைகளாகும்.

இதை கூடிய விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக பொலனறுவையில் உள்ள சிவன் கோயில் எம்முடையது அல்லவென்றாலும் அதை நாம் பாதுகாக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கோணேச்சரம் கோயில் கோகண்ண விகாரை என்றே கூறப்படுகிறதாகவும் கூறிய தேரர் இதற்காக நாம் கோயிலை இடித்து விகாரை கட்ட மாட்டோம் என்றும், ஆனால் அங்குள்ள தொல்பொருள்களை பாதுகாக்க வேண்டும் எனவும் மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post