இலங்கையில் பாடசாலைக் காதல் ஜோடிகளின் விபரீத முடிவு! பொலிசார் தீவிர விசாரணை

கட்டுகஸ்தொட்டை – நவயாலத்தன்ன தொடரூந்து பாலத்தில் இருந்து மகாவலி கங்கையில் குதித்து பாடசாலை மாணவன் மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வெவ்வேறு பாடசாலைகளில் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரத்தில் கல்விகற்ற இவர்கள், காதல் ஜோடிகளாகும்.இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில், நேற்று வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இன்று அதிகாலை 5.45 மணியளவில் குறித்த இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீண்டநேர தேடுதலின் பின்னர் இருவரின் சடலமும் மீட்கப்பட்டது.

இத் தற்கொலை சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post