தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்! அதிர்ச்சியில் மக்கள்

கொரோனாத் தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாகத் தற்போது காணப்படுகின்றது.உலக சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கொரோனாத் தொற்றுக்கு முன்னர் ஒரு பவுண் தங்கம் உள்நாட்டில் 70 ஆயிரம் ரூபா முதல் 75 ஆயிரம் ரூபா வரை காணப்பட்டது.

இதேவேளை, 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 120,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post