கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பல ரயில் சேவைகளை மீள் ஆரம்பம்!

கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர் சேவை தொடருந்து சேவை இந்த மாத நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது.காங்கேசந்துறை – கோட்டை இடையிலான குளிரூட்டப்பட்ட நகர் சேவை தொடருந்து சேவை ஜூலை 18, 19 மற்றும் 20 திகதிகளில் அதிகாலை 5:10 மணிக்கு கல்கிசையிலிருந்து புறப்படும்.

அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1:15 மணிக்கு கல்கிசை நோக்கிப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கான ஆசனங்களை முன்பதிவு செய்ய வேண்டும் என்று ரயில்வே திணைக்களம் பயணிகளிடம் கேட்டுள்ளது.
Previous Post Next Post