அவுஸ்திரேலியாவில் விப த் தில் இலங்கை மாணவி ப லி! சாரதிக்கு 10 ஆண்டுகள் சி றை

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவியொருவர் விபத்தில் பாலியாவதற்கு காரணமான சாரதிக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

20 வயதான நிசாலி பெரேரா என்ற இலங்கை மாணவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.நிசாலி, அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குறித்த விபத்தினை மேற்கொண்ட சாரதியான 38 வயதான ஷேன் கோச்ரேனே என்பவருக்கு விக்டோரியா நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்த சாரதி ஏற்கனவே மூன்று தடவைகள் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.அவுஸ்திரேலியா மிகவும் பாதுகாப்பான நாடு எனவும் அங்கு தமக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும் நிசாலி தன்னிடம் கூறியதாக அவரது தாயார் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு மகளை தனியாக அனுப்பி வைத்தது தங்களது தவறு எனவும் அவ்வாறு அனுப்பி வைத்திருக்காவிட்டால் இலங்கையில் அவர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் எனவும் அவரது தாயாரர் உருக்கமான குறிப்பிட்டுள்ளார்.சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியமை, விபத்தை மேற்கொண்டு தலைமறைவாகியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஷேனுக்கு நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்துள்ளது.
Previous Post Next Post