வியாழேந்திரனுக்கு புதிய ராஜாங்க அமைச்சர் பதவி

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கு கட்டுப்பாடு, சிறு பொருளாதார பயிர்களை பயிரிடுவது ஊக்குவிக்கும் ராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சதாசிவம் வியாழந்திரேன் கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு முதலில் பிரவேசித்த அவர், பின்னர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டார்.இதனையடுத்து பதவிக்கு வந்த புதிய அரசாங்கத்தில் பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு மாகாணம்) ராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் தற்போது புதிய ராஜாங்க அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post